ஈழத்துப் பெண்ணை திருமணம் செய்துகொண்ட வெளிநாட்டவர்! தீயாக பரவும் காணொலி…

கல் தோன்றா மண் தோன்றா காலத்தில் தோன்றிய நமது செம்மொழியான தமிழ் மொழி தமிழர்களின் தாய்மொழி. தமிழ் திராவிட மொழிக் குடும்பத்தின் முதன்மையான மொழிகளில் ஒன்றும் செம்மொழியும் ஆகும்.

தமிழ் மொழி, பண்பாடு, கலாசாரம் என்பது இன்றுவரை ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றியது என்றுதான் பலராலும் நம்பப்படுகிறது. அதன் சிறப்பு உலகம் முழுவதும் பரவிக்கிடக்கின்றது.

தமிழ் மொழி தொல்காப்பியர் காலத்துக்கு முன்பிருந்தே இன்றுவரை எழுத்துவழக்காகவும் பேச்சுவழக்காகவும் பயன்படுத்தப்படுகின்றது. இது தமிழ் மொழிக்குரிய சிறப்பாகும்.

இந்நிலையில், இன்று மேற்கத்தை நாட்டவர்கள் தமிழ் மொழியை பயில்வதில் மிகவும் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில், டென்மார்க்கை சேர்ந்த பிலிப் என்ற நபர் தமிழ் மொழியை மிகவும் சரளமாக பேசுகின்றார்.

சில ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கை வந்த அவர், இலங்கையில் தங்கியிருந்து தமிழ் மொழியை கற்றுக்கொண்டுள்ளதாகவும், வவுனியா, யாழப்பாணம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று தமிழ் மொழியை கற்றுக்கொண்டதாகவும் கூறியுள்ளார்.

மேலும், தமிழ் மக்களின் பண்பாடு, பழக்க வழக்கம் உள்ளிட்டவைகளை மீது அதிகம் நாட்டம்கொண்ட அவர், வவுனியாவை சேர்ந்த தமிழ் பெண் ஒருவரை திருமணம் செய்துகொண்டதாகவும் கூறியுள்ளார்.