யாழ் பல்கலைகழக பாலியல் பகிடிவதை விவகாரம்! இறுதியில் மாணவி கொடுத்த அதிர்ச்சி பதில்

யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்வில் இடம்பெற்றதாக கூறப்படும் பகிடிவதை தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்ட மாணவன் கற்கை நெறியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்வு கடந்த வாரம் இடம்பெற்றது. இதன்போது மாணவி ஒருவர் மீது ஒருவர் பாலியல் ரீதியான பகிடிவதையில் மூத்த மாணவர்கள் சிலர் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

பாதிக்கப்பட்ட மாணவி பல்கலைக்கழக துணைவேந்தரிடம் முறையிட்டிருந்தார் என்றும் கூறப்பட்டிருந்தது.

எனினும், இது தவறான தகவல், அப்படியெதுவுமே நடக்கவில்லையென சில தினங்களுக்கு பின்னர் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிக்கை வெளியிட்டிருந்தது.

பாலியல் ரீதியான பகிடிவதை இடம்பெறவில்லையென்று துணைவேந்தரும் அறிக்கை வெளியிட்டிருந்தார்.

எனினும், இந்த சம்பவத்துடன் தொடர்புடையதாக குற்றம் சுமத்தப்பட்ட மூத்த மாணவன் கற்கைநெறியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து, துணைவேந்தரோ, பல்கலைகழக மாணவர் ஒன்றியமோ வாய் திறந்திருக்கவில்லை.

எனினும், பாதிக்கப்பட்ட மாணவி சம்பவம் தொடர்பில் துணைவேந்தரின் கவனத்திற்கு உடனடியாகக் கொண்டு செல்லவில்லை என்றும், உதவி பதிவாளரின் கவனத்திற்கே கொண்டு சென்று இருந்தார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

பாரதூரமான இந்த குற்றச்சாட்டு தொடர்பில், பல்கலைகழகம் உள்ளக விசாரணையை நடத்தி வருகிறது. விசாரணை முடிவடையும் வரை, மூத்த மாணவனிற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை பாதிக்கப்பட்ட மாணவியை நிர்வாகத்தின் விசாரணைக்காக அழைத்தபோது, பாலியல் ரீதியான துன்புறுத்தல் எதுவும் நடைபெறவில்லை என்று தற்போது அந்த மாணவி பல்டி அடித்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.