பறிபோகிறதா பிரதமர் பதவி? பரபரப்பின் மத்தியில் ரணில் மேற்கொண்ட நடவடிக்கை!

நாளைய தினம் சிறிலங்கா அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன முக்கியமான நடவடிக்கை ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகிவரும் நிலையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய உறுப்பினர்களை அவசரமாக சந்தித்து மந்திராலோசனை நடத்தியுள்ளதாக கொழும்புத் தகவல்கள் கூறுகின்றன.

குறிப்பாக ஆட்சிமாற்றம் ஒன்றை மீண்டும் ஏற்படுத்தும் நோக்கோடு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சில நடவடிக்கைகளை நாளையதினம் மேற்கொள்ளப்போவதாக உத்தியோகப்பற்றற்ற தகவல்கள் தெரிவித்துவரும் நிலையில் ரணில் இந்த அவசர மந்திராலோசனைகளை நடத்தியுள்ளதாக அறியமுடிகிறது.

இதில் மீண்டும் ஆட்சிமாற்ரத்தை ஏற்படுத்த மைத்திரி முனைவாரேயேனால் முன்னர் கற்ற பாடத்தை நினைவில் வைத்துக்கொள்ளட்டும் என ரணில் கூறியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஏற்கனவே இரவோடிரவாக பிரதமர் பதவியில் மாற்றம் செய்து ரணில் தலைமையிலான ஆட்சியையே தலைகீழாக மாற்றியிருந்த நிலையில் நீதிமன்றத் தலையீட்டின்மூலம் மீண்டும் ஐக்கிய தேசிய முன்னணி அட்சி கொண்டுவரப்பட்டது.

இந்த நிலையில் நாளைய தினம் மீண்டும் அதுபோன்ற மாற்றங்கள் நிகழக்கூடும் என்பதால் கொழும்பு அரசியல் தற்போதே சூடுபிடித்துள்ளதாக உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன.