பிரிட்டன் குண்டு வெடிப்பில் தொலைந்த தோழியை சேர்த்து வைத்த ட்விட்டர்!

பிரிட்டன் குண்டு வெடிப்பில் தொலைந்த தோழியை சேர்த்து வைத்த ட்விட்டர்!

இங்கிலாந்து நாட்டில் மான்செஸ்டர் நகரில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் தொலைந்து போன பெண் ஒருவர் ட்விட்டர் சமூக வலைதளம் மூலம் தனது தோழியிடம் இணைந்துள்ளார்.

ட்விட்டர்இங்கிலாந்து நாட்டின் மான்செஸ்டர் பகுதியில், அமெரிக்க பாப் பாடகி அரினா கிராண்டியின் இசைக் கச்சேரியில் சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது.

இதில் 22 பேர் உயிரிழந்துள்ளனர். 59 பேர் படுகாயமடைந்துள்ளனர் ஐ.எஸ் தீவிரவாதிகளால் இந்தத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டது.

இதனிடையே குண்டு வெடிப்பு சம்பவத்தின் போது ஹீதர் என்ற இளம்பெண் காணாமல் போயுள்ளார்.

இதையடுத்து அவரது தோழி விக்கி பேட்ஸ், ட்விட்டர் வலைதளத்தில் காணாமல் போன தோழியின் புகைப்படத்தையும் அவரது விவரங்களையும் பதிவிட்டுள்ளார்.

இதையடுத்து குண்டு வெடிப்பின்போது அவர் காப்பாற்றப்பட்டு பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக நேதன் என்பவர் பதிலளித்துள்ளார்.

இதன் மூலம் தோழிகள் இருவரும் இணைந்துள்ளனர்.

இதையடுத்து சமூக வலைதளத்தில் இணைந்த தோழிகளுக்கு பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

– Vikatan