தமிழர்களின் தலைநகரில் 5நிமிடங்கள் மன்றாடி நடு வீதியில் பதை.. பதைத்து பறி போன தமிழ் இளைஞனின் இறுதி பயணம்

திருகோணமலையில் இறந்த தனிஸ்டன் ஊர்வலத்திற்கு இப்ப ஆரவாரத்துடன் பெரும் எடுப்பில் சுடுகாடு போய் என்ன பயன் அவன் நேற்று முன்தினம் கழுத்து அறுந்து இரத்தம் சொட்ட சொட்ட வீதியையும் அதில் நடமாடும் மனிதர்களை ஏக்கத்துடன் தம்மை யாராவது காப்பாற்றுவார்களா அதில் குறிப்பாக முச்சக்கர வண்டி சாரதியிடம் 5நிமிடம் மேல் மன்றாடி இனி பிரயோசனமில்லை என உயிர்வலியில் ஓடும் போது ஒருவனுக்கும் காப்பாற்றனும் என சிந்தனை வரவில்லை.

மனசாட்சி செத்து போச்சு… மனிதாபிமானம் அத்துப்போச்சு’ நாள் தோறும், பேசும் மண்ணாகி போய்விட்டது, தமிழ் மண். ‘காசு… பணம்… துட்டு… மணி… மணி…’ என, மனிதன் ஓடிக்கொண்டிருக்கையில், வேதம் சொன்ன சட்டதிட்டங்களை கேட்கவோ, குற்றுயிராய் கிடக்கும் மனிதர்களின் காப்பாற்றினால் சட்டப்பிரச்சினையாம் அதனால் அவலத்தை வேடிக்கை பார்க்கவே பொருத்தமானது என பெரும்பாலோரின் நியாயக் குரலாக ஒலிக்கிறது.

நண்பர்கள் உறவினர்கள் ஒன்று சூழ எம் மண்ணில் நடந்த இந்த இறுதி ஊர்வலம் என்றுமே எம் நெஞ்சில் மறக்கமுடியாத ஒரு வடு சென்று வா தம்பி சமூக வலைத்தளங்களில் ஆதங்கப் படுகின்றனர் பலர்…

இன்று பலரின் கண்ணீரின் மத்தியில் இளைஞனின் இறுதிப் பயணம்..