தமிழ் மன்னன் இராவணனின் பெயரில் முதலாவது செயற்கைகோள்! தமிழனுக்கு பெருமை!

இலங்கை முதல் முறையாக ராவணா-1 என்ற செயற்கைகோளை வெற்றிகரமாக விண்வெளிக்கு செலுத்தி வரலாற்றில் முக்கிய இடம் பிடித்துள்ளது.

அந்த வகையில் குறித்த செய்மதிக்கு இலங்கையை ஆண்ட தமிழ் மன்னான இராவணனின் பெயரை வைத்திருப்பதானது தமிழருக்கு பெருமை சேர்க்கும் விடயம் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அந்த வகையில் தமிழ் மன்னனின் பெரை வைத்து ராவணா-1 என்ற இந்த செயற்கைகோளை வெற்றிகரமாக தற்போது விண்ணுக்கு அனுப்பியுள்ளது.

இதன் மூலம் செயற்கைகோள் வைத்திருக்கும் பட்டியலில் இலங்கையும் இணைந்துள்ளது.

இராவணன்…

முன்னொரு காலத்தில் முழு இலங்கையையும் இராவணன் ஆண்டான் என்பதற்கு இன்றைய இலங்கையின் தெற்கில் இருந்து வடக்குவரை பாதிப்புகள் இருக்கின்றன.

இராவணனை சார்ந்து நிற்கும் பெயர்கள் முக்கிய சின்னங்கள் என பல விடையங்கள் இன்னமும் கையாளப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

இன்று இருக்கும் “சிகிரியா” இராவணனின் காலத்தில் ராவணனின் “புட்பக விமானம்” இறங்கும் தளமாக பாவிக்கப்ட்ட இடமாக இருக்கலாம் என்று சில சிங்கள ஆய்வாளர்கள் எழுதியிருக்கிறார்கள்.

இராவணன் பாவித்த புட்பக விமானத்தின் சில எச்சங்களும் இராவணன் காலத்து சில எச்சங்களும் சிகிரியா குன்றின் நடுவில் இருக்கிறது என்று நம்பப்படும் சுரங்கத்திற்குள் இருந்ததாகவும் மேற்கத்தேய ஆட்சியாளர்களின் காலத்தில்தான் அவை திருடப்பட்டிருக்கலாம் எனவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், இராவணனின் அடுத்த பிறப்புதான் “புத்தர்” என சொல்லும் சிங்கள சமூகம் சிங்களவர்களை காக்கத் தான் இராவணன் புத்தராக பிறப்பெடுத்ததாக சொல்கிறது.

இராவணனை சிங்கள மன்னன் என்று சிங்கள எழுத்தாளர்கள் பலர் இன்னமும் சொல்லிவருவதோடு அந்த தகவல் தலைமுறை தலைமுறையாக கடத்தப்பட்டுவருகிறமை குறிப்பிடத்தக்கது.