கண்ணகி அம்மன் ஆலய கும்பாவிஷேக நிகழ்வில் மர்ம நபர்! இலங்கையில் தொடரும் பதற்றம்!

நாடுபூராகவும் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் சந்தேகத்தில் பேரில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்பட்ட எருவில் கிராமத்தில் சந்தேகத்தின் பேரில் நடமாடிய குறித்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

நேற்று நாடு பூராகவும் பல பகுதிகளில் வணக்கஸ்த்தலங்களை குறிவைத்து நடார்த்தப்பட்ட தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டதை தொடர்ந்து வணக்கஸ்த்தலங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளன.

நேற்று எருவில் கிராமத்தில் கண்ணகி அம்மன் ஆலய கும்பாவிஷேக நிகழ்வுகள் இடம்பெற்றது. அதன் காரணமாக காலை அதிகளவான மக்கள் ஆலயத்திற்கு வருகை தந்தனர் பின்னர் மாலை நேரமே இவரது நடமாட்டம் இருந்திருக்கின்றது.

மாலை 4.30க்கு பின்னர் ஆலயத்தினை அண்டிய சூழலில் சந்தேகத்தின் பேரில் நடமாடிய நபரினை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த நபர் கிராமத்திற்கும் மக்களுக்கும் அறியப்படாத நபராக இருந்த போது. பிரதேச வாசிகள் விசாரணையை மேற்கொண்டபோது முன்னுக்குபின் முரணாக பேசியதனை தொடர்ந்து ஆலய நிர்வாகம் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வருகைதந்த களுவாஞ்சிக்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளுக்காக சந்தேக நபரை அழைத்துச்சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது