இலங்கையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு: பலி எண்ணிக்கை 290 ஆக உயர்வு

இன்று (22) வெளியான தகவலின் படி குண்டு வெடிப்புச் சம்பவங்களில் பலியானோர் எண்ணிக்கை 290 ஆக அதிகரித்துள்ளது. 500 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

அவசர தகவல்களை அறிந்துகொள்வதற்காக, 24 மணிநேர சேவையை 011 302 4873, 011 302 4883 மற்றும் 011 201 3039 ஆகிய இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

வெளிநாட்டவர்கள் 0112 32 3015 என்ற இலக்கத்தில் தகவல்களைப் பெற்றுக்கொள்ளலாம்.

இன்றைய குண்டுவெடிப்புகளில் இதுவரை, மூன்று காவல் அதிகாரிகள் உள்பட 207 பேர் உயிரிழந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 450 பேர் காயமடைந்துள்ளனர்.

  • இதுவரையிலும் 207 பேர் மரணம்
  • கொழும்பு தேசிய வைத்தியசாலை- 66 மரணங்கள், 260 பேர் சிகிச்சை.
  • நீர்கொழும்பு வைத்தியசாலை – 104 மரணங்கள், 100 பேர் சிகிச்சை.
  • மட்டக்களப்பு வைத்தியசாலை- 28 மரணங்கள், 51 பேர் சிகிச்சை.
  • கழுபோவிலா வைத்தியசாலை- 2 மரணங்கள், 6 பேர் சிகிச்சை.
  • ரகமாவில்- 7 மரணங்கள், 32 பேர் சிகிச்சை.

    இவ்வாறு உயிரிழந்தவர்களில் 9 வெளிநாட்டவர்கள் அடங்குவதோடு, 13 வெளிநாட்டவர்கள் காயமடைந்துள்ளனர் என்று, சுகாதாரச் சேவைகள் பணிப்பாளர் டொக்டர் அனில் ஜயசிங்க தெரிவித்துள்ளார்.ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்திருக்கும் நிலையில் இன்னும் உயிரிழப்புக்கள் அதிகரிக்கக் கூடும் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்ற நிலையில் குருதிக்கொடை வழங்குமாறும் மக்களுக்கு அவசர கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது,

    இந்நிலையில் தொடர்ந்தும் சில சில இடங்களில் குண்டு வெடிப்புக்கள் நடைபெற்றுக்கொண்டிருப்பதால் அடுத்து அடுத்து எங்கு, என்ன நடக்கும் என தெரியாத நிலையில் அனைத்து மக்களையும் வீடுகளிலேயே பாதுகாப்பாக இருக்குமாறும் அரசு கோரிக்கை விடுத்துள்ளது.