இரட்டை அர்த்தப் புகழ்ச்சி எனக்கு அச்சமளிக்கின்றது..!

இரட்டை அர்த்தப் புகழ்ச்சி எனக்கு அச்சமளிக்கின்றது..!

உங்களுடைய இரட்டை அர்த்தப் புகழ்ச்சி யானது எனக்கு அச்சமளிப்பதாக உள்ளது என  மாத்தறை மாவட்ட எம்.பி. டலஸ் அழகப் பெருமவை பார்த்து நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க் கிழமை வாய்மூலவிடைக்கான கேள்வி நேரத்தின் போது நிதி அமைச்சரிடத்தில் ஐக்கிய

மக்கள் சுதந்திர முன்னணியின் மாத்தறை மாவட்ட கூட்டு எதிரணி ஆதரவு பாராளு மன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும வினாவொன்றைத் தொடுத்திருந்தார்.

இச்சமயத்தில் நிதி மற்றும் ஊடக அமைச்சராக புதிதாக பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ள அமைச்சர் மங்கள சமரவீர தனது ஆசனத்திலிருந்து எழுந்து, நான் நிதி அமைச்சைப் பொறுப்பெடுத்த பின்னர் மாத்தறை மாவட்டத்தைச் சேர்ந்த

பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் என்னிடத் தில் முதலாவதாக கேள்வி கேட்பது எனக்குமகிழ்ச்சியளிக்கின்றது  என்றாலும் இரட்டை அர்த்தப் புகழ்ச்சி எனக்கு அச்சமளிக்கின்றது என்றார்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like