மெளன அஞ்சலியையடுத்து சபையில் சலசலப்பு

கொழும்பு மற்றும் புற பகுதிகளில் இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தை அடுத்து நாட்டில் நிலவும் அச்ச சூழல் குறித்து விவாதிப்பதற்காக விசேட பாராளுமன்ற அமர்வுக்காக சபை இன்று ஒரு மணியளவில் கூடியது.

இந்த அமர்வின் போது சபாநாயகரின் ஆரம்ப உரையினையடுத்து, குண்டு வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தோருக்கு ஒரு நிமிட மெளன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

இதனையடுத்து பிரதமர் ரணில் விக்ரமிசங்க நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் உரையாற்ற ஆரம்பித்துள்ள நிலையில் சபையில் தற்போது சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த 21 ஆம் திகதி ஞாயிற்க்கிழமை நாட்டில் இடம்பெற்ற மிலேச்சத்தனமான 8 தொடர் தற்கொலைத் தாக்குதலையடுத்து அப்பாவிப் பொதுமக்கள் மிகவும் மிலேச்சத்னமாக கொல்லப்பட்டனர். இதுவரை 310 பேர் கொல்லப்பட்டுள்ள நிலையில், 500 க்கும் அதிகமான மக்கள் படுகாயமடைந்து வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.