அமைச்சர் ரிசாட் பதியுதீனின் சகோதரி வீட்டில் தீவிர சோதனை! சிக்கிய பல திடுக்கிடும் ஆதாரம்..

அமைச்சர் ரிசாட் பதியுதீனின் சகோதரியின் வீடு பொலிசாரால் சோதனையிடப்பட்டுள்ளது.

அமைச்சர் ரிசாட் பதியுதீனிடமும் நேற்று பொலிசார் சில தகவல்களை உறுதிப்படுத்த முனைந்திருந்தனர். அது தொடர்பான செய்திகள் நேற்று வெளியாகியிருந்தன.

இந்த நிலையில், நேற்று மாலை புத்தளத்தில் அமைந்துள்ள அமைச்சர் ரிசாட் பதியுதீனின் சகோதரி வீட்டில் குற்றப்புலனாய்வு பிரிவினர் சோதனையில் ஈடுபட்டனர்.

இதன்போது, சில ஆவணங்களை பொலிசார் கைப்பற்றியதாக தெரிகிறது.

அந்த ஆவணங்கள் தொடர்பான, “சந்தேகத்தை தீர்க்கும்“ விசாரணைகளில் தற்போது ஈடுபட்டுள்ளதாக தெரிய வருகிறது.

இதேவேளை, தெமட்டகொடவில் கைதான பிரபல வர்த்தகர் இப்ராஹிம் ஹாஜியார், அமைச்சர் ரிசாட் பதியுதீனுடன் நெருக்கமானவர் என தெரிகிறது.

ஹாஜியாரின் இரண்டு மகன்கள் தற்கொலை குண்டுதாரிகளாக சினமன் கார்டன், கிங்ஸ்பெரி ஹோட்டல்களில் தாக்குதல் நடத்தியிருந்தனர்.

இளைய மகன் தலைமறைவாகி விட்டார். இன்னொரு மகன் பொலிசாரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

கைதான மகன் திருமணம் செய்தது, பிரபல நகைக்கடை உரிமையாளர் ஒருவரது மகளை. அந்த நகைக்கடை உரிமையாளரே, அமைச்சர் ரிசாட் பதியுதீனின் வலதுகரமாக செயற்பட்டு, நிதி விவகாரங்களை கையாள்பவர்.

வர்த்தகரின் குடும்ப திருமண தொடர்பின் மூலம், ஹாஜியாரும் ரிசாட் பதியுதீனுடன் சில வர்த்தக நடவடிக்கைகளில் இணைந்து செயற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

கைதானவர்கள் அமைச்சர் ரிசாட் பதியுதீனிற்கு வர்த்தக ரீதியாக நெருக்கமானவர்களாக இருந்துள்ளனர். இது ரிசாட் பதியுதீனின் நண்பர்களிற்கும் தெரியும், எதிரிகளிற்கும் தெரியும்.

இதனால்தான், குண்டுத்தாக்குதலில் ஹாஜியார் குடும்ப அங்கத்தவர்கள் தொடர்புபட்ட செய்தி வெளியானதும், அமைச்சர் ரிசாட் பதியுதீனின் பெயரும் இதில் இணைக்கப்பட்டு, சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகின.

இந்த செய்திகளை அமைச்சர் ரிசாட் பதியுதீனின் ஊடகப்பிரிவு அடியோடு மறுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.