ஸ்ரீலங்கா தொடர் குண்டுவெடிப்பு -45 வெளிநாட்டவர்ககள் உயிரிழப்பு!

ஸ்ரீலங்காவில் இடம்பெற்ற தொடர் குண்டுத்தாக்குதல்களில் 45 வெளிநாட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஸ்ரீ லங்கா வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ அறிவிப்பில் தெரிவித்துள்ளது.அத்துடன் கொல்லப்பட்டவர்களில் 31 பேரின் சடலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி ,சீனாவைச் சேர்ந்த இருவர்,எட்டு இந்தியர்கள், நெதர்லாந்து, போர்த்துக்கல், பங்களாதேஷ், பிரான்ஸ், ஜப்பான், மற்றும் ஸ்பெயின்,ஆகிய நாடுகளைச்சேர்ந்த ஒருவர்,சவுதியைச்சேர்ந்த இருவர்,துருக்கியைச்சேர்ந்த இருவர்,பிரிட்டனைச்சேர்ந்த அறுவர்,பிரிட்டன் மற்றும் அமெரிக்க பிரஜாவுரிமையைப் பெற்ற இருவர்,மற்றும் அவுஸ்ரேலிய,இலங்கை பிரஜாவுரிமையைப்பெற்ற இருவர் என 31 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதேவேளை கொழும்பு சட்டமருத்துவ அதிகாரி பிரிவில் உள்ள பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள 14 வெளி நாட்டு பிரஜைகளின் சடலங்கள் அடையாளம் காணப்படவில்லை.

அத்துடன் 17 வெளிநாட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.இவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலை,மற்றும் தனியார் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுள்ளனர்.

வெளிநாட்டவர்களின் நலன்கள் தொடர்பில் தொடர்ந்தும் ஸ்ரீலங்கா வெளிவிவகார அமைச்சு கண்காணிப்பை மேற்கொண்டு வருகிறது.மேலதிக விபரங்கள் தொடர்பில் அறிந்துகொள்ள 94 112323015 என்ற தொலைபேசி இலகத்தின் மூலம் தொடர்பு கொள்ளமுடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.