விடுதலைப்புலிகள் தொடர்பில் வெளியான அதி முக்கிய தகவல்!! ஒரு போதும் இப்படி செய்யாதவர்கள்..

விடுதலைப் புலிகள் அமைப்பு 2009இல் மௌனிக்கப்படும் வரை மக்கள் குடியிருப்பு மீதோ அல்லது மக்கள் மீதோ தாக்குதல் நடத்தவில்லை. என்றுமே மக்களை இலக்காக விடுதலைப் புலிகள் பயன்படுத்தவில்லை.

ஆனால் இன்று அந்த நிலைமை தலைகீழாக மாறியுள்ளதுடன், மக்களை இலக்கு வைக்கும் அளவுக்கு முஸ்லிம் தீவிரவாதம் உருவெடுத்துள்ளது.

2009ஆம் ஆண்டு காலப்பகுதயில் யுத்தம் உக்கிரமாக நடந்து கொண்டிருந்த போது கொழும்பின் ஆங்காங்கே பேருந்துகளில் குண்டு வெடிப்புகள் இடம்பெற்றன.

எனினும் இதன்போது குறித்த குண்டு வெடிப்புகள் தம்மால் நேர்ந்தவை அல்ல என விடுதலைப் புலிகள் தெட்டதெளிவான அறிக்கைகளை வெளியிட்டிருந்தன.

ஆனால் இலங்கையில் அப்போதிருந்த அரசாங்கமோ அல்லது சர்வதேசமோ இந்த அறிக்கைகளையும், விடுதலைப் புலிகள் அந்த குண்டு வெடிப்புகளை நடத்தவில்லை என்பதையும் நம்பவில்லை.

எனினும் தற்போதைய நிலைமையை பார்க்கும் போது அன்றைய தினம் விடுதலைப் புலிகளின் பெயரால் முஸ்லிம் தீவிரவாதிகள் மேற்படி குண்டு தாக்குதல்களை செய்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுகின்றது.

அதேவேளை இந்த தொடர்தாக்குதல்களையெல்லாம் பார்க்கும்போது இதன் சூத்திரதாரிகளின் முதல் தாக்குதல்களாக இவை இருக்க வாய்ப்பில்லை. நன்கு முன் அனுபவம் உள்ள ஏற்கனவே பலரின் உயிர்களை காவு கொண்ட ஒரு குழுவே இதனை செய்துள்ளது என்பது தெட்டத் தெளிவாகிறது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளராக இருந்த சு.ப.தமிழ்செல்வன், சிங்கள மக்களுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் எந்தவித விரோதமும் இல்லை. எமது மண்ணில் இருக்கும இராணுவத்திற்கும் எமக்குமே விரோதம் உள்ளது

நாம் சிங்கள மக்களை நேசிக்கின்றோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால் முஸ்லிம் தீவிரவாதிகள் மக்கள் மீது எந்த அக்கறையும் இன்றி மக்களை சூரையாடியிருப்பது வேதனையான விடயமாகும்.

கடுமையான போர் நடந்த போதிலும் கூட விடுதலைப் புலிகள் ஒழுக்க சீலர்களாக மக்களை பாதுகாக்கும் வகையிலும் அவர்களுக்கு தீங்கு நேராமலும் நடந்து கொண்டனர்.

ஒட்டு மொத்தத்தில் அவைரும் தமிழீழ விடுதலைப் புலிகளை தீவிரவாத அமைப்பாக பார்த்தாலும் கூட அவர்கள் மக்களை கொலை செய்யவிலை என்பது நிதர்சனமே.

அதேபோன்று மற்றுமொரு விடயம் என்னவெனில் யாழில் இருந்து முஸ்லிம்களை வெளியேற்றியது விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினரான விநாயகமூர்த்தி முரளிதரன் என அழைக்கப்படும் கருணாவே.

அத்துடன் காத்தான்குடியில் முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டதற்கும் காரணம் கருணா தான். எனினும் கருணாவின் இந்த செயற்பாடுகளுக்கு விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனிடம் அனுமதி பெறப்படவில்லை என்பதை தவிர்த்து அறிவிக்கவேபடவில்லை என்பதே சத்தியம்.

ஆனால் கருணாவின் இந்த செயற்பாடுகளுக்கு ஒட்டு மொத்தமாக சேர்த்து விடுதலைப் புலிகள் மீரே பலி வந்து சேர்ந்தது. இலங்கை இராணுவத்தினரை இலக்கு வைத்து விடுதலைப் புலிகள் தாக்கிய போதும், மக்களை எப்பொழுதும் கொல்ல எத்தனித்ததில்லை.

இந்த நிலையிலேயே விடுதலைப்புலிகளுக்கு எதிராக யுத்தம் செய்த மகிந்த நேற்று முன் தினம் இடம்பெற்ற முஸ்லிம் தீவிரவாதிகளின் தாக்குதல் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போது புலிகளை பாராட்டியிருந்தார்.

விடுதலைப்புலிகளை பல சிங்கள கல்வி மான்கள் மற்றும் மற்றும் மக்களும் ஆதரித்திருந்தமை குறிப்பிடத் தக்கது.