பாதுகாப்பு அமைச்சில் மாற்றமா? பாதுகாப்பு அமைச்சு பொன்சேகாவிற்கு?

இலங்கையில் நான்கு நாட்களாக தொடர்ச்சியாக பதற்ற நிலை நிலவி வருகின்றது. இந்நிலையில் ஜனாதிபதியால் பாதுகாப்பு தொடர்பில் மாற்றங்கள் கொண்டுவரப்போவதாகவும் தகவல் வெளியாகியிருந்தது.

இந்நிலையில், தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலமையின் காரணமாக தனக்கு பாதுகாப்பு அமைச்சை வழங்குவதற்கு அமைச்சரவையில் கருத்தொன்று எழுந்துள்ளதாக பீல்ட் மாஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

சிவில் துறைகளில் சிறந்தவர்கள் இருக்கும் போது அந்த நடவடிக்கைகளை அவர்களுக்கு ஒப்படைக்காமையின் காரணமாக அந்த துறைகளில் வீழ்ச்சி ஏற்படுவதாக அவர் கூறியுள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதேவேளை நேற்றைய தினம் நடைபெற்ற விசேட நாடாளுமன்ற அமர்வின் போது சரத் பொன்சேகா கருத்துத் தெரிவிக்கும் போது,

நாமல் குமாரவின் தகவல்களுக்கு முன்னுரிமை கொடுத்திருந்த அளவுக்கு கூட புலனாய்வுத்துறை அறிக்கைக்கு ஜனாதிபதி முன்னுரிமை வழங்கவில்லை. மேலும் எனக்கு மைத்திரியுடன் எந்த கோபமும் இல்லை. ஆனால் அவர் இதற்கு பொறுப்பேற்று பதவியை இராஜினாமா செய்யவேண்டும் . என தெரிவித்துள்ளார்.