ஸ்ரீலங்காவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ள வேண்டாம்! அதிரடியாக தடை விதித்த நாடு

ஸ்ரீலங்காவில் தற்போதுள்ள நிலமையின் கீழ் யாரும் ஸ்ரீலங்காவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ள வேண்டாம் என சீன அரசாங்கம் அங்குள்ள மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

சீனாவின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் ஊடகப் பேச்சாளர் கேன்க் புஅன்க் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்காவில் தற்போது ஏற்படுத்தப்ட்டுள்ள நிலமையின் கீழ் ஸ்ரீலங்காவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ள வேண்டாம் என சீன அரசாங்கம் அந்நாட்டு மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

ஸ்ரீலங்காவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்கள் தொடர்பிலான சம்பவங்கள் தொடர்பில் மேலும் அவதானத்துடன் இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ள சீன அரசாங்கம், நிலவும் சூழ்நிலை மீண்டும் சாதாரண தன்மைக்கு திரும்பும் வரையில் ஸ்ரீலங்காவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொள்வதை தவிர்த்துக் கொள்ளுமாறு கோரியுள்ளது.

சீனாவின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் ஊடகப் பேச்சாளர் கேன்க் புஅன்க் இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ளதாக, சீனாவின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் உத்தியோகபுர்வ இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்காவில் கத்தோலிக்க தேவாலங்கள் உள்ளிட்ட சில இடங்களில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதல்களில் சீன நாட்டு பிரஜையொருவர் உயிரிழந்துள்ள நிலையில், மேலும் ஐந்து நபர்கள் காணாமல் போயுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அத்தோடு மேலும் ஐந்து சீன பிரஜைகள் கடுமையான காயங்களுக்கு உள்ளாகியுள்ள நிலையில், அதில் இருவரின் நிலமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு மீண்டும் ஸ்ரீலங்காவில் சாதாரண சூழ்நிலை உருவாக்கி ஸ்தீரத்தன்மை உறுதிப்படுத்தப்ப சீனா தமது பங்களிப்பினை ஸ்ரீலங்காவிற்கு வழங்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்தாகும்.