மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த விசேட வேலைத்திட்டம்

பாடசாலை மற்றும் பாடசாலை மாணவர்களின் பாதுகாப்புக்காக கல்வி அமைச்சர் அகிலவிராஜின் ஆலோசனையின் பேரில் விசேட வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பாடசாலை மாணவர்கள் மற்றும் அதிபர், ஆசிரியர்கள் உட்பட ஊழியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது கல்வி அமைச்சின் பொறுப்பாகும்.

இதன் பிரகாரம் தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளை சிறப்பாக முன்னெடுப்பதுடன் பாடசாலை வளாக பாதுகாப்பில் விசேட கவனஞ்செலுத்த வேண்டும் என கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டின் அனைத்து பாடாசாலைகளும் எதிர்வரும் 29 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் அதற்கு முன்னர் பாடசாலைகளில் பாதுகாப்பை உறுதிப்படுத்துவாதற்காக குறித்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இது தொடர்பாக கல்வி அமைச்சரும் கல்வி அமைச்சின் செயலாளரும் பாதுகாப்பு பிரதானிகளிடம் அறிவுறுத்தியுள்ளனர். மேலும் பாடசாலை மாணவர்கள் பயணிக்கும் வாகனங்கள் குறித்தும் விசேட அவாதானம் செலுத்தப்பட்டுள்ளது.