வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் 15 குழந்தைகள் : உதவி கேட்டு தொலைபேசி மூலம் கோரிக்கை! (குரல் பதிவு இணைப்பு)

வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் 15 குழந்தைகள் : உதவி கேட்டு தொலைபேசி மூலம் கோரிக்கை! (குரல் பதிவு இணைப்பு)

விடாது பெய்து வரும் மழையால், காலி, ஹினிதும – நுககஹா பகுதியில் உள்ள வீடொன்றில் பதினைந்து குழந்தைகளுடன் இருபதுக்கும் மேற்பட்டவர்கள் சிக்கியுள்ளனர். இத்தகவலை, அங்கிருக்கும் ஒருவர் தொலைபேசி மூலமாக தெரிவித்துள்ளார்.

“மாலை ஆறு மணியளவில் மழை பெய்ய ஆரம்பித்தது. விடாமல் பெய்துகொண்டிருந்ததால் இரவு பத்து மணியளவில் இப்பகுதியில் வீடுகள் அனைத்தும் மூழ்க ஆரம்பித்தன. இப்போது நாம் அனைவரும் ஒரு மாடி வீட்டிலேயே தங்கியிருக்கிறோம். நாம் இருக்கும் வீடு ஒரு தனித் தீவு போலக் காட்சியளிக்கிறது.

“ஏற்கனவே ஒரு வீட்டில் இருந்து கூக்குரல் எழுந்ததால், பரிசல் போன்ற ஒன்றை அமைத்துக்கொண்டு சென்று அவர்களையும் மீட்டு வந்து எம் வீட்டில் தங்க வைத்திருக்கிறோம். நாம் செல்லும் வரை அவர்கள் கூரையைப் பிடித்துத் தொங்கிக்கொண்டிருந்தனர். வெள்ளத்தில் மூழ்கவிருந்த சுமார் 15 குழந்தைகளும் தற்போது எம்முடனேயே இருக்கின்றனர்.

“குழந்தைகளின் பசியைத் தீர்க்க போதுமான உணவு இல்லாததே தற்போது பிரச்சினையாக இருக்கிறது. பேரிடர் நிவாரணக் குழுவுக்கு அழைப்பு விடுத்தபோது, அவர்களால் நாம் இருக்கும் பகுதிக்குள் நுழைய முடியாதுள்ளதாகத் தெரிவித்தனர்.

“மழை இன்னும் விட்டபாடில்லை. இன்னும் சிறிது நேரம் மழை தொடர்ந்து பெய்தால் நாம் உயிர்தப்ப வழியே இல்லை.”