தாஜ் சமுத்திராவிற்குள் குண்டு வெடிக்காமல் திரும்பி வந்த தற்கொலைதாரியின் படம்

உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதலில் கொழும்பிலுள்ள நட்சத்திர ஹோட்டல்கள் மூன்று குறிவைக்கப்பட்டன. சங்கரில்லா, சினமன் கார்டன், கிங்ஸ்பெரி ஹோட்டல்களிற்குள் மனித வெடிகுண்டுகள் புகுந்து வெடித்து சிதறினர்.

அதேபோல, தாஜ்சமுத்திரா ஹோட்டலிற்குள்ளும் மனித வெடிகுண்டாக ஒருவர் நுழைந்து, குண்டு வெடிக்காததால் அங்கிருந்து வெளியேறினார்.

அப்துல் லதீப் ஜமீல் மொஹமட் என்பவரே அந்த தாக்குதலை நடத்த முயற்சித்தார்.

அப்துல் லதீப் ஜமீல் மொஹமட்டினது புகைப்படம் தற்பொழுது வெளியாகியுள்ளது.

அவர் தீவிர மதப்பற்றுள்ளவர், அவுஸ்திரேலியாவிற்கு கல்வி நடவடிக்கைக்காக சென்றதன் பின்னரே தாடி வளர்த்து, தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்பை ஏற்படுத்தினார் என அவரது சகோதரி குறிப்பிட்டுள்ளார்.

தாஜ் சமுத்திரா நட்சத்திர ஹோட்டலி

இவர் பிரித்தானிய பல்கலைகழகம் ஒன்றில் கற்றிருக்கிறார். பிரித்தானியாவின் தென்கிழக்கு பகுதியில் 2006 -2007 காலப்பகுதியில் தங்கியிருந்தார். இலங்கை திரும்புவதற்கு முன்னர் அவுஸ்திரேலியாவில் முதுகலை பட்டத்தை பெற்றிருக்கிறார்.

ஏனைய தாக்குதல்தாரிகளை போலவே, காலை 9 மணியளவில் குண்டை வெடிக்க வைக்கும் திட்டத்துடன் இவரும் தாஜ் சமுத்திரா நட்சத்திர ஹோட்டலிற்கு சென்றார்.

தாஜ் சமுத்திராவில் குண்டு வெடிக்காததையடுத்து, தெகிவளை தங்கும் விடுதிக்கு திரும்பி வந்து நுழைந்தபோது. அடுத்த ஓரிரு நிமிடத்தில் குண்டு வெடித்தது!

ஏனைய அனைத்து தாக்குதல்தாரிகளையும் போல, முதுகுப்பையில் குண்டை பொருத்திக் கொண்டு சென்று, தாஜ் சமுத்திரா ஹோட்டலிற்குள் வெடிக்க வைக்க முயன்றார். எனினும், குண்டு வெடிக்கவில்லை.

இதனால் அச்சமடைந்த மொஹமட் நட்சத்திர ஹோட்டலை விட்டு வெளியேறி, தெஹிவளைக்கு சமீபமாக உள்ள விடுதியொன்றிற்கு வந்தார். அந்த விடுதியில் தங்கியிருந்து விட்டே, தாக்குதலிற்காக தாஜ் சமுத்திரா ஹோட்டலிற்கு சென்றிருந்தார்.

தாஜ் சமுத்திரா ஹோட்டல் பணியாளர்கள் அவரது நடவடிக்கையில் சந்தேகமடைந்து, அவரை கவனிக்கத் தொடங்கியதாலேயே குண்டுப்பையை அங்கு வைக்காமல் தன்னுடன் எடுத்து செல்ல வேண்டிய நெருக்கடி அவருக்கு ஏற்பட்டிருக்கலாமென கருதப்படுகிறது.

தற்கொலையாளி தங்கியிருந்த தெஹிவளை விடுதி

தெஹிவளை விடுதியில் குண்டை சோதனை செய்தபோது, அது வெடித்து மொஹமட்டும், இன்னொருவரும் உயிரிழந்தனர். ஏனைய பிரதேசங்களில் நடந்த ஒருங்கிணைந்த குண்டுவெடிப்புக்களிற்கு இரண்டு மணித்தியாலம் கழிந்து, இந்த சம்பவம் நடந்தது.

இதேவேளை, சர்வதேச பயங்கரவாதம் தொடர்பான நிபுணர்களின் கருத்துப்படி, பிரித்தானியா- குறிப்பாக தென்கிழக்கு பகுதி பல்கலைகழக மாணவர்களிடையே இஸ்லாமிய தீவிரவாத கருத்துக்கள் வேரூன்றி வருவதாக நீண்டகாலமாக எச்சரித்துள்ளனர்.

ஐ.எஸ் அமைப்புடன் இணையும் ஐரோப்பிய இளைஞர்களின் பட்டியலில், பிரித்தானிய பல்கலைகழக மாணவர்களே முதலிடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கத