ஐ.எஸ் அமைப்பின் முதலாவது இலங்கை உறுப்பினர் யார் தெரியுமா? வெளிவந்த திடுக்கிடும் தகவல்

இலங்கையில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதல்களுக்கு ஐ.எஸ் அமைப்பு உரிமை கோரியுள்ள நிலையில் இது தொடர்பான பல தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த தீவிரவாத குழுவில் இலங்கையர்களும் உறுப்பினர்களாக இருந்து இலங்கையில் தற்கொலை குண்டு தாக்குதலை நடத்தியுள்ளனர்.

அந்த வகையில் இலங்கையர்களும் ஐ.எஸ் அமைப்பில் உறுப்பினர்களாக இருக்கின்றமை அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதேவேளை, தாக்குதல்களை மேற்கொண்ட தீவிரவாதிகள் குழு தொடர்பில் இலங்கை இராணுவம் முழுமையான வெளிப்படுத்தலை மேற்கொண்டுள்ளது.

இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் இதனை இராணுவம் வெளிப்படுத்தியுள்ளது.

இதில் ஐ.எஸ். அமைப்பில் சேர்ந்த முதலாவது உறுப்பினர் தொடர்பில் தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஐ.எஸ். அமைப்பில் சேர்ந்த முதலாவது உறுப்பினர் மொஹமட் முஷீன் கஹராஷ் நிலாம் என இனங்காணப்பட்டுள்ளார்.

இவர் 2015ஆம் ஆண்டு குறித்த அமைப்பில் இணைந்த நிலையில், சிரியாவில் இடம்பெற்ற யுத்தத்தில் உயிரிழந்துள்ளார் என குறிப்பிடப்படுகின்றது.

இவரைத் தொடர்ந்து இந்த அமைப்பில் பலர் உறுப்பினர்களாகி உள்ளனர்.

மேலும் இவர்களது குடும்ப உறுப்பினர்கள் சிரியா சென்றுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவரது புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளன.