அறிவுறுத்தல்களை பின்பற்றாத பலர் அனர்த்தத்தில் பரிதாபகரமாக பலியானார்கள்

அறிவுறுத்தல்களை பின்பற்றாத பலர் அனர்த்தத்தில் பரிதாபகரமாக பலியானார்கள்

வெள்ள அனர்த்தம் ஏற்­படும் முன்பே சில பகு­தி­க­ளுக்கு அறி­வு­றுத்தல் வழங்­கப்­பட்­டி­ருந்த போதும் சில குடும்­பங்கள் வெளி­யே­றாமல் இருந்­த­மையால் பலர் பரி­தா­ப­க­ர­மாக  உயி­ரி­ழந்­துள்­ளனர். எனவே வரும் நாட்­களில் அநா­வ­சிய குடி­யி­ருப்­புக்கள் அனைத்­தையும் நீக்க அர­சாங்கம் நட­வ­டிக்கை எடுக்கும் என அமைச்சர் ராஜித சேனா­ரத்ன தெரி­வித்தார்.

அனர்த்த முகா­மைத்­து­வ அமைச்சில் நேற்று செவ்­வாய்­கி­ழமை இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு உரை­யாற்றும் போதே அமைச்சர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் தெரி­விக்­கையில்,

கடந்த நாட்­களில் இடம்­பெற்ற வெள்ள அனர்த்­தத்­தி­னாலும் மண்­ச­ரிவு அபா­யத்தின் போதும் அறி­வு­றுத்­தல்­களை பின்­பற்­றாது பலர் இறந்­தார்கள் என்ற விடயம் வருத்தத்திற்­கு­ரி­ய­தாகும்.

சில தினங்­க­ளுக்கு முன்­பாக மண்­ச­ரிவு அபாயம் ஏற்­ப­டக்­கூடும் என்ற அச்சம் காணப்­பட்டு ஒரு இடத்­திற்கு சென்று அங்­குள்ள வீடொன்றில் மண­ச­ரிவு ஏற்­படும்  என்­பதால் அனை­வரும் பாது­காப்­பான இடங்­க­ளுக்கு செல்­லுங்கள் என்று அறிவு­றுத்­தினோம்.

இருப்­பினும் அந்த வீட்டில் இருப்­ப­வர்கள் சற்று பொறுங்கள் 3 ஆவது ரொட்டி தயா­ராகிக் கொண்­டி­ருக்­கின்­றது சாப்­பிட்­டதன் பின்னர் உட­ன­டி­யாக சென்­று­வி­டுவோம் என்­றார்கள். இவ்­வா­றான தரு­ணத்தில் எதிர்­பா­ராத சந்­தர்ப்­பத்தில் அவர்­களின் வீட்டின் மீது மண்­மேடு சரிந்து வீழ்ந்­ததில் அந்த வீட்­டி­லி­ருந்த மூவ­ருமே பரி­தா­ப­க­ர­மாக உயி­ரி­ழ­ந்தனர்.

எனவே மக்கள் முன்­னெச்­ச­ரிக்­கை­யாக வழங்­கப்­படும் அறி­வு­றுத்­தல்­களை கருத்­திக்­கொண்டு செயற்­பட வேண்­டி­யது மிக அவ­சி­ய­மான ஒன்­றாகும். எவ்­வா­றா­யினும் எதிர்­வரும் நாட்­களில் நாங்கள்  மேற்­படி விவ­கா­ரங்களை சட்ட ரீதி­யாக அணுகவுள்ளோம்.

அதற்கமையாக அநாவசிய குடியிருப் புக்கள் சகலவற்றையும் நீக்கிவிட்டு மேற்படி பகுதிகளில் வசித்தவர்களுக்கு மாற்று இடங்களை வழங்கவும் தீர்மானித்துள்ளோம் என்றார்.