இலங்கைக்குள் அமெரிக்க இராணுவப் புலனாய்வு பிரிவற்கு பாரிய நெருக்கடி!! அடுத்து என்ன நடக்கும்?

உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பு தொடர்பான விசாரணைகளில் அமெரிக்க தலையீட்டை நிறுத்தும் இராஜதந்திர நெருக்கடியை இலங்கைக்கு வழங்கும்படி, முன்னாள் இராணுவப் புலனாய்வு பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவிதாரண கேட்டுக் கொண்டார் என செய்தி வெளியிட்டுள்ளது கொழும்பு ரெலிகிராப்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் இலங்கைக்கு வரும் அமெரிக்க விசாரணையாளர்கள் பின்னர் விரிவடைந்து நிலம், விமானத்தளம் உள்ளிட்ட இடங்களையும் பெற்றுக்கொள்வார்கள் என கபில ஹெந்தவிதார எச்சரித்தார் என குறிப்பிட்டுள்ளது. அவரது குரல் பதிவு என ஒலிப்பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளது.

இராணுவ சேவையிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர், சீனாவின் சங்கரில்லா ஹோட்டல்களின் பாதுகாப்பு அதிகாரியாக நாளாந்தம் பெரும் தொகை சம்பளத்தை பெற்றுக்கொண்டு பதவியிலிருக்கிறார் என ரெலிகிராப் குறிப்பிட்டுள்ளது.

கோத்தபாய ராஜபக்சவின் நெருங்கிய சகாவான கபில ஹெந்தவிதாரண, இந்த கோரிக்கையின் மூலம் விசாரணைக்கு இடையூறு ஏற்படுத்த முயற்சிக்கிறாரா என்றும் ரெலிகிராப் கேள்வியெழுப்பியுள்ளது.

கபில ஹெந்தவிதாரணவிற்கு சீன உளவு அமைப்புக்களுடன் நெருக்கமான தொடர்பிருப்பதாக குறிப்பிட்டுள்ள ரெலிகிராப், கபில ஹெந்தவிதாரணவின் குடும்ப உறுப்பினர்களின் கல்வி செலவிற்கும் சீனா உதவியதாக குறிப்பிட்டு, இன்னொரு ஒலிப்பதிவை வெளியிட்டுள்ளது.