இலங்கை தற்கொலை தாக்குதல் நடந்து ஒரு வாரத்தின் பின் டென்மார்கை சோகத்தில் ஆழ்திய பெரும் துயர்..

டென்மார்க் கோடீசுவரரின் மூன்று குழந்தைகள், இலங்கை வெடிகுண்டு தாக்குதலில் உயிரிழந்தனர்.

டென்மார்க்கில் பெஸ்ட் செல்லர் என்ற நவநாகரீக ஆடை தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் 46 வயதான ஆண்டர்ஸ் ஹோல்ச் பெளல்சன் ((anders holch povlsen)).

இவருடைய சொத்து மதிப்பு 55 ஆயிரம் கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. இவருக்கு 4 குழந்தைகள் இருந்த நிலையில் அவர்கள் இலங்கைக்கு சுற்றுலா சென்றனர்.

அப்போது அங்கு நடந்த வெடிகுண்டு தாக்குதலில் துரதிருஷ்டவசமாக சிக்கினர். அதில், பெளல்சனின் 3 குழந்தைகள் உயிரிழந்தனர்.

உயிரிழந்த டென்மார்க்கின் மிகப்பெரிய கோடீஸ்வரரான ஆண்டர் ஹொல்ச் பொவ்ல்சன் அவர்களின் மூன்று குழந்தைகளின் இறுதி வணக்க நிகழ்வு இன்று (04.05.2019) மக்களின் கண்ணீருக்கு மத்தியில் டென்மார்கில் நடைபெற்றது.

சென்றவர்களில் இதில் அழுகை வராதவர்கள் யாரும் இல்லை என்பதுடன் பல தொலைக்காட்சிகளில் கூட இக் காட்சிகள் ஒளிபரப்பாகிய வேளை பாரத்தவர்கள் அனைவரையும் கண்ணீரில் மூழ்கடித்தமை குறிப்பிடத் தக்கது