சம்மாந்துறையில் மூன்று முஸ்லிம் ஆசிரியர்களுக்கு நடந்த முகம் சுழிக்க வைக்கும் சம்பவம்! குழப்பத்திற்கு காரணம் யார்??

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரன சூழ்நிலையில் நாடு முழுவதிலும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றமை யாவரும் அறிந்த விடயம்.

படையினரால் ஒவ்வொரு ஆசிரியைகள், மாணவர்களின் பைகள் மற்றும் சுற்றுச் சூழலை பரிசோதனை செய்து பாடசாலையின் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

பெண் பொலிசார் இல்லாத காரணத்தால் குறிப்பிட்ட பாடசாலையில் சாரதாரண பெண்ணால் ஹபாயா அணிந்து வந்த காரணத்தினால் குறித்த மூன்று ஆசிரியைகள் மாத்திரம் உடலளவில் பரிசோதனைக்கு உட்பட்ட சம்பவமொன்று நிகழ்ந்துள்ளது.

ஏனையவர்கள் ஹபாயா அணியாததால் வழமையான பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

குறித்த மூன்று ஆசிரியைகளும் ஹபாயா அணிந்து சென்றமையும் குறிப்பிடத்தக்கது.

ஹபாயா அணிந்து சென்றால் பேருந்துகளில் கூட மக்கள் அச்சத்தில் உள்ள நிலையில் மாணவர்களின் பீதியை போக்கும் வகையில் படைத் தரப்பு செய்த இந்த நல்ல செயலை அப் பாடசாலையில் கற்பிக்கும் ஒரு முஸ்லீம் ஆசிரியை தகவலை திரிபு படுத்தி தமிழ் – முஸ்லிம் மக்களிடம் ஒற்று மையை சீர்குலைக்கும் வகையில் செய்தியை ஒட்டு மொத்தத்தில் தவறாக வெளியிட்டமை அப்பகுதி முஸ்லிம் – தமிழ் மக்களிடம் வேதனையை ஏற்படுத்தி உள்ளது.

இவ்விடத்தில் முப்படையினர் பாராட்டப்பட வேண்டியவர்கள், அவர்கள் சாதுவான முறையில் ஒழுக்கமான நடைமுறையில் பரிசோதனைகளை மேற்கொண்டுவருகின்றமை வரவேற்கத்தக்கது.

அவ்வாறிருக்கையில் உள் மனதில் இனவாத கசப்புக்களை வினையாக்கிய சிலர் இவ்வாறு சாதாரன பரி சோதனைகளை சமூகத்தை குழப்பும் வகையில் செய்தியாக பரவ விட்டு நாட்டின் பாதுகாப்பிற்கு குந்தகம் ஏற்படுத்தும் செயலாக பார்க்கப் படுகிறது.

இவ் அதிகாரம் எந்தவொரு பாடசாலைக்கும், பாடசாலை சமூகத்துக்கும் இதுவரையில் அரசாங்கத்தினாலோ அல்லது பொலிஸாரினாலோ வழங்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

என கற்பணையில் கதை கட்டி விடப்பட்டுள்ளது. ஆனால் வட மாகாணத்தின் அனைத்த பாடசாலைகளுமே இதை விட மோசமான நிலையில் பரிசோதிக்கப் படுகிறது.

நாட்டின் நலன் கருதி பாதுகாப்பிற்கு ஒத்துளைப்பு வழங்க வேண்டியது யாவரது கடமையும்.

இலங்கையில் கத்தோலிக்கர்களை தான் தற்கொலை தாரிகள் இலக்கு வைத்தனரே தவிர பௌத்தர் – இந்து -இஸ்லாம் இலக்கு வைக்கப் படவில்லை.

இவ் ஆசிரியர்கள் மீதான பரசோதனை இடம் பெற்றது எனவே அவர்களின் அச்சத்தில் என்ன குறை இருக்கிறது.

இப்படி குழப்பம் ஓய்ந்துள்ள நிலையில் சாதாரண பாதுகாப்பு விடயங்களை பெரிதாக்கிய ஒருவர் சமூகங்களிடையில் விரிசலை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்பவர்களிற்கு தேசிய பாதுகாப்பு சட்டத்தல் கடுமையான சட்ட விதிகள் நடைமுறையில் உள்ளது.

இச் சூழலில் ஹபாயா அணிந்து பாடசாலை சென்றவர்களை பரிசோதனை செய்த இவ் விடயம் முற்று முழுதாக திரிபு படுத்தப்பட்டு பாடசாலையை குழப்பத்திற்குள்ளாக்கிய சம்பவம் எப்படி முடியப் போகிறது என தாமதித்துத் தான் பார்க்க வேண்டும்….

பாதுகாப்பு விடயங்களை திசை திருப்பும் வகையில் செயற்படுபவர்களை குற்றப் புலனாய்வு பிரிவினர் ஆராய்ந்து வருகின்றமையும் குறிப்பிடத் தக்கது.