தமிழ் பெண் புலஸ்தினியை காதலித்தான், மதம் மாற்றினான், தீவிரவாதி ஆக்கினான்!! துலங்கும் மர்மங்கள்..

இலங்கையில் ஈஸ்டர் திருநாளில் நடந்த ஐ.எஸ் தீவிரவாதத் தாக்குதலுக்கு முன்பு தீவிரவாதி ஒருவன் ஒரு இந்து பெண்ணை காதலித்து மதம மாற்றி தீவிரவாதியாக்கிய அதிர்ச்சி தரும உண்மை தெரியவந்துள்ளது.

ஏப்ரல் 21ஆம் தகதி இலங்கையில் எட்டு இடங்களில் நடந்த தற்கொளலைப்படைத்தாக்குதலில் 259 பேர் இறந்தனர்.

இதில் தொடர்புடைய 9 பேரின் பெயர்களையும் இலங்கை பொலிஸார் வெளியிட்டனர். அதன் பின்னர் மூன்று பெண்கள் உட்பட 6 பேரின் படங்களை வெளியிட்டு தேடிவந்தனர்.

இந்த மூன்று பெண்களில் ஒருவர் புலஸ்தினி மகேந்திரன் என்கிற சாரா.

இவர் கொழும்பின் புறநகர் பகுதியில் உள்ள செயின்ட் செபாஸ்டியன் சர்ச்சில் தற்கொலைத் தாக்குதல் நடத்திய முகமது அஸ்துன் என்பவரின் மனைவி இந்து மதத்தைச் சேர்ந்த இவர் அஸ்துனை காதலித்து மதம் மாறி திருமணம் செய்து கொண்டவர் என்பதும் தெரியவந்தது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தேட்டத்தீவு என்ற இடத்தில் கவிதா – மகேந்திரன் தம்பதிக்கு மகளாகப் பிறந்தவர். பள்ளிப்படிப்பு படித்துக்கொண்டிருந்த போது இப்போது தற்கொலைத் தாக்குதல் நடத்திய தீவிரவாதி முகமது அஸ்துனை காதலித்தாள்.

அவனுடன் வீட்டை விட்டு வெளியேறினாள். பிறகு மீண்டும் வீடு திரும்பிய அவரை இலங்கை தவ்ஹீத் ஜமாத்தின் நிர்வாகி அப்துல் ரசீக் வலுக்கட்டாயமாக அழைத்து சென்று தனது அலுவலகத்தில் வைத்திருந்து அவரை மதம் மாற்றி முகமது அஸ்துனுக்கு திருமணம் செய்து வைத்ததாக புலஸ்தினி தாயார் கூறுகிறார்.

“ஒரு ரசீக் போன் செய்து, உன் மகள் மதம் மாறி அஸ்துனை நிக்கா செய்த கொண்டாள் என்று சொன்னான். என் மகளுக்கு என்னவானாலும் நீ தான் பொறுப்பு என்று நான் கூறினேன். அதன் பிறகு சில வாரங்கள் கழித்து என் மகள் போன் செய்தால்.

அஸ்துன் நடவடிக்கை எனக்கு பிடிக்கவில்லை. அவனுக்கு பல தொடர்புகள் உள்ளன என்று கூறினாள். அதன் பிறகு எ்னிடம் பொலிஸார் விசாரணை நடத்திய போது தான் அவள் தீவிரவாதியாகிப் போனாள் என்பதை நான் அறிந்தேன். என்கிறார் தாய் கவிதா.

லவ் ஜிகாத்தில் சிக்கியது மட்டுமல்ல முகமது அஸ்துடன் சேர்நத தற்கொலைத் தாக்குதல் நடத்தவும் முயன்றால் புலஸ்தினி. அந்தளவுக்கு அவள் மூளைச்சலவை செய்யப்பட்டிருந்தாள்.

செயின்ட் செபாஸ்டின் சர்ச் பாதிரியார் சிசிடிவி காட்சிகளைப் பார்த்து அடையாளப்படுத்தும் போது அவள் அதிகாளையில் சர்ச் அருகே வந்து நின்றதையும் காலை 7.30 மணிக்கு சர்ச்சுக்குள் வந்து சிறிது நேரத்தில் வெளியேறியதையும் உறுதிப்படத்தினார்.

புலஸ்தினிக்கு சிறுவயதில் ஏற்பட்ட காயத்தினால் அவளால் ஒரு காலை மடித்து அமர்வது மிகவும் சிரமமானது என்பதால் அவர் அந்த வலி பொறுக்காமல் வெளியேறியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

புலஸ்தினி பள்ளியில் படித்த காலத்தில் இந்து மதம் சார்ந்த போட்டிகளில் பல பரிசுகள் வென்றவர். ஆனாலும் அவர் எப்படி இஸ்லாத்துக்கு மதம் மாற சம்மதித்தாள் என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை என்றார் தாய் கவிதா.

புலஸ்தினியின் பள்ளிப்படிப்பு, காதல் விவகாரம், ரசீதால் கடத்தப்பட்டு மதம் மாற்றப்பட்டு அஸ்துனுக்கு நிக்கா செய்து வைத்த விவகாரத்தை இலங்கை மேற்கு மாகாண கவர்ணர் அசாத்சாரி ஒரு பேட்டியில் உறுதிப்படுத்தியுள்ளார்.

புலஸ்தினி அவர் ஜிசிஇ ஆர்டினரி லெவல் (பிளஸ்2 போன்ற பள்ளிப்படிப்பு) படித்துக் கொண்டிருந்தாள். 18 வயது நிரம்பாதவள். ஆகவே அவளை திருமணம் செய்து கொள்ள முடியாத நிலையில் அஸ்துன் அவளை அனுப்பிவிட்டான்.

ஆனால் ரசீக் அவளை வலுக்கட்டாயமாக அழைத்து வந்தான்.

முஸ்லிம் மதத்தைத் தழுவினால் இந்த வயது பிரச்சினை ஒரு விஷயமல்ல என்று கூறி அவளை மதம் மாற்றி வைத்து நிக்கா செய்து வைத்தான் என்று கவர்னர் சாலி கூறியுள்ளார்.

ஏப்ரல் 26ஆம் திகதி தீவிரவாதி ஜாக்ரன் ஊரான காத்தான்காடு அருகே உள்ள சாய்ந்தமருது கிராமத்தில் ஒரு வீட்டை இராணுவத்தினர் சுற்றிவளைத்தனர்.

அப்போது உள்ளிருந்தவர்கள் வெடிவைத்துக் கொண்டு இறந்தனர். மீட்கப்பட்ட 16 சடலங்களில் ஒருத்தி புலஸ்தினி.

ஆனால் இப்போதும் அப்துல் ரசீக் சுதந்திரமாக உலவிக் கொண்டு இருக்கிறான். இலங்கை தவ்கீத் ஜமாத்திலிருந்து விலகிச் சென்றவரட்கள் ஆரம்பித்தது தான் நேஷனல் தவ்கீத் ஜமாத்.

அதற்கும் எங்களுக்கும் தொடர்பு இல்லை என்று கூறிக்கொண்டிருக்கிறான். இவனுக்கு தமிழ்நாட்டில் வேறு அமைப்புகளுடனும் தொடர்பு உள்ளது.

இவனது நடவடிக்கைகள் பற்றி அரசுக்கு தெரியுமா? இந்த கேள்விக்கு பதில் அளித்துள்ள மேற்கு மாகாண கவர்ணர் சாலி,

ரசீக் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜமாத்துக்கு நிறைய நிதி கிடைக்கிறது. இவர்கள் சென்ற ஆட்சிக்காலத்தில் உளவுத்துறையிடமிருந்தும் பணம் கிடைக்கப்பெற்றார்கள என்கிறார் சாலி.