முடக்கப்பட்டிருக்கும் சமூக வலைதளங்கள்! பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் விடுத்துள்ள எச்சரிக்கை

தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான வகையில் பொய்யான தகவல்களை சமூக வலைத்தளங்களில் பரப்புபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக பாதுகாப்பு செயலாளர் சாந்த கோட்டேகொட தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், போலியான தகவல்களை பரப்பும் குழுக்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு செயலாளர் சாந்த கோட்டேகொட தெரிவித்துள்ளார்.

அவர்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை மேற்கொள்ள அரசாங்கம் தயாராவதாகவும் பாதுகாப்புச் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார் என அந்த செய்தியில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலையை அடுத்து பேஸ்புக், வட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் முடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.