சிறிலங்காவின் முக்கிய இணையத்தளங்களை முடக்கிய தமிழீழ இணைய இராணுவத்தினர்!

முள்ளிவாய்க்கால் படுகொலை தினமான நேற்று தமிழீழ இணைய இராணுவத்தினரால் (Tamileelam Cyber Force) சிறிலங்காவின் முக்கிய இணையத்தளங்களுக்குள் ஊடுருவி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

ஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் 3 என்கின்ற பெயரில் 3 ஆம் தடவையாக 300 – க்கு மேற்பட்ட சிறிலங்கா இணையத்தளங்களுக்குள் ஊடுருவியுள்ளனர் தமிழீழ இணைய இராணுவத்தினர்.

மே 18 தமிழின அழிப்பு நாளான நேற்று சிறிலங்காவின் பிரதமர் ரணிலின் இணையத்தளம் , தூதூவராலயங்களில் இணையத்தளங்கள், சிறிலங்கா அரசநிர்வாக இணையங்கள் மற்றும் சிறிலங்கா அரச ஆதரவான செய்தி ஊடக இணையங்கள் உட்பட 300 -க்கும் மேற்பட்ட சிறிலங்கா இணையத்தளங்களை ஊடுருவி அந்த தளங்களில் முள்ளிவாய்க்கால் இன்படுகொலைப்படங்களை பதிவேற்றியும் அதை தாம் மறக்க மாட்டோம் எனவும் செய்தியும் “விழ விழ எழுவோம்… விழ விழ எழுவோம்… ஒன்று விழ நாங்கள் ஒன்பதாய் எழுவோம்!” என்ற பாடலும் பதிவேற்றியுள்ளனர்.

2018 ஆம் ஆண்டு இறுதிப்பகுதியில் இணையத்தளங்களினூடாக மேற்கொள்ளப்படும் தாக்குதல்களில் இருந்து சிறிலங்காவை பாதுகாப்பதற்காக, புதிய படையணி ஒன்றை உருவாக்கி உள்ளதாக சிங்கள இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க கூறிய நிலையில், இத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி இதே மாதிரியாக 2017 -2018 ஆம் ஆண்டுகளில் மே மாதம்18ம் திகதியும் 300க்கும் மேற்பட்ட இணையத்தளங்களும் 2018 நவம்பர் மாதம் ஒட்டுக்குழு கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனின் டுவிட்டர் பக்கத்தையும் இதே பேரில் முடக்கியிருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

இதேவேளை நேற்றைய தினம் இந்த இணையத்தளங்களுக்குள் பிரவேசிக்கக் கூடியதாக இருந்தது எனினும் இன்று இணையதளங்களை பார்வையிட முடியாமை உள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

கீழ் வரும் இணைப்பில் சைபர் தாக்குதல் நடத்தப்பட்ட இணையங்களின் தொகுப்பு

http://kuwaitembassy.net/news.php?news_id=294

http://www.eaglewings.lk/

http://thesaleshop.lk/

http://cellcorner.lk/

buddhamissions.com/

http://clouds.lk/

http://digidots.lk/

dollarcorporation.com/

marvel.lk/

http://royal1970.org/

sharmfernandoassociates.com/

thewaves.lk/

மேலும் இணையங்களுக்கு கீழ் வரும் இணைப்பில் சென்று பார்வையிடலாம்

https://mirror-h.org/search/hacker/24172/