சூடுபிடித்துள்ள இந்திய தேர்தல் களம்! திமுக வசமாகும் தமிழகம்?

இந்தியாவில் தற்போது நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கான முடிவுகள் வெளிவந்து கொண்டிருக்கின்ற நிலையில் தமிழகத்தில் திராவிட முன்னேற்ற கழக கூட்டணி தொடர்ந்து முன்னிலைப் பெற்று வருகின்றது.

இந்தியா முழுவதிலும், 7 கட்டங்களாக நடந்து முடிந்துள்ள குறித்த தேர்தலில் நாடு முழுதும் பாரதிய ஜனதா கட்சி அதிக தொகுதிகளில் முன்னிலைப் பெற்று வருகின்றதுடன் காங்கிரஸ் கட்சி இரண்டாவது இடத்தில் இருந்து வருகின்றது.

தமிழகத்தில், துத்துக்குடி தொகுதியில் திமுக வேட்பாளர் கனிமொழி, சிவகங்கையில் கார்த்தி சிதம்பரம், நாமக்கல் தொகுதியில் திமுக கூட்டணியில் உள்ள கொ.ம.தே. கட்சியின் ஈஸ்வரன், பெரம்பலூர் தொகுதியில் திமுக கூட்டணி வேட்பாளர் பாரிவேந்தர்,

கள்ளக்குறிச்சியில் திமுக வேட்பாளர் கவுதம் சிகாமணி, அரக்கோணம் தொகுதியில் திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன், ஓசூர் சட்டசபை தொகுதி திமுக வேட்பாளர் எஸ்.ஏ. சத்யா ஆகியோர் முன்னிலை பெற்றுள்ளனர்.

வாரணாசியில் மோடி, காந்தி நகரில் அமித் ஷா, காசியாபாத்தில் வி.கே.சிங் (பாஜக) ஆகியோர் முன்னிலை பெற்றுள்ளனர்.

ராம்பூர் தொகுதியில் சமாஜ்வாடி வேட்பாளர் ஆசம் கானை விட பாஜக வேட்பாளர் ஜெயப்பிரதா பின்தங்கியுள்ளார்.

போபால் தொகுதியில் சாத்வி பிரக்யாவைவிட காங்கிரஸ் வேட்பாளர் திக்விஜய் சிங் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளார். திருவனந்தபுரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் சசி தரூர் பின்தங்கியுள்ளார்.

வடமேற்கு டெல்லியில் பாஜக வேட்பாளர் ஹன்ஸ் ராஜ் ஹன்ஸ் முன்னிலை பெற்றுள்ளார்.

இதேபோல் கோரக்பூரில் பாஜக வேட்பாளர் ரவி கிஷன், அனன்சோல் தொகுதியில் பாஜக வேட்பாளர் பாபுல் சுபிரியோ முன்னிலை பெற்றுள்ளார். முசாபர்நகரில் தற்போதைய பாஜக எம்பி சஞ்சீவ் பால்யன் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.

பாட்னா சாகிப் தொகுதியில் மத்திய மந்திரி ரவி சங்கர் பிரசாத் முன்னிலையில் உள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் சத்ருகன் சின்கா பின்தங்கியுள்ளார்.