தந்தால் வாங்கு கேட்டு வாங்காதே

இக்கட்டுரை சமீபத்தில் சீதனத்துக்காக தன் உயிரை மாய்த்த சகோதரிக்கு காணிக்கை

#தந்தால்_வாங்கு_கேட்டு_வாங்காதே
பாரதி வந்த பின்னும் பாட்டிலே மட்டும் பெண்ணடிமைத்தனம் பேசுகிறவர்களாகவும் பேணுகிறவர்களாகவும் நம் சமுதாயம் விளங்குகிறது.

அண்மையில் எனது காதுகள் வழி சென்று மூளையில் இறங்கி இதயத்தை இறுக்கிய சம்பவங்கள் இரண்டு
ஒன்று மானவர்கள் ஜவரின் அவலை சாவு
மற்றாது ஒரு பெண்ணின் சீதந்த்துக்கான சாவு

பெண்கள் சீதனத்துக்காய் மாண்ட கதைகள் நம் நாட்டில் குறைவில்லாமல் படிக்கக் கிடைக்கும் அத்தோடு படிக்க வராத கவனத்துக்கு வராத கதைகள் காவியங்கள் ஏராளம்.

பெண்ணடிமைத்தனத்துக்கான போராட்டங்கள் பாடல்களிலும், வாய்மொழிகளிலும், மகளிர் தினத்திலும் மட்டுமே உயிர்பெற்று மரணித்து விடுகின்றன.செயற்ப்பாட்டு வடிவில் எதுவும் முன்னெடுக்கக்கப்படுவதில்லை.

சீதனம் எனப்படுவது தமிழர் தம் வாழ்க்கையின் புரையோடிப்போன கலாச்சார மரபு தான் .. அது எவ்வாறு நமது கலாச்சாரத்துக்குள் உள்ளெடுக்கப்பட்டதென்றால் ஒரு பெண்ணை பெற்ற பெற்றோர்கள் தாங்கள் ஆசையாயும் பாசமாயும் வளர்த்த பெண்ணுக்கு அன்பளிப்பு செய்யும் முகமாக சிலவற்றை பரிசளித்தர்கள்..
அன்பை பரிசளித்தார்கள், சில பொருள்களினை பரிசளித் தார் அதில் தாய் வீட்டு சீதனமாக அம்மி, குழவி, கட்டில்,சமையல் பொருட்கள் , பாத்திரங்கள் என தன் மகள் இன்ணொறு வீட்டில்( மணமகன்) வாழ போகிறாளே ஆக அவளுக்கான பொருட்களை அனுப்பி வைத்தார்கள், அப்போது மணமகன்களுக்கு சீதனமாக மணப்பெண்ணே இருந்தாள், பின்னர் காலப்போக்கில் நகைகளை பரிசளித்தார்கள் , நிலங்களை பரிசளித்தார்கள், பணங்களை பரிசளித்தாற்கள்…… இதுவெல்லாம் பெண்ணை பெற்ற பெற்றோர்கள் தங்கள் இயல்பு வரம்புக்குள் எட்டும்படியே செய்து வந்தார்கள், மணமகன் கேட்டு செய்யவில்லை.

ஆனால் இன்று யாழ்ப்பாணத்தானின் நிலையென்ன?
உலகுக்கு உத்தமும் ,வரலாறும், வீரமும், வாழ்வியலும் போதித்த தமிழர்(யாழ்ப்பாணாத்தார்) இப்போது பெண்ணடிமைத்தனம் , ஒடுக்குமுறைகளை போதிக்க விளைகிறார்களா? என எண்ணத்தொன்றுகிறது. அவ்வாறு இங்கு நடக்கும் கலியான சந்தையிலே சீதனப் பேரம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது..

கலியான சீதனம் என்ற சொல்லின் அர்த்தம் இழந்து ஒரு பேரம் பேசும் சொல்லாக உருவெடுத்துள்ளது அல்லது சமூக களை பெருக்கெடுத்துள்ளது.இதை களைந்தால் தான் சமூகம் துளிர்கொள்ள ஆரம்பிக்கும்,

அண்மையில் ஒரு பெண் கலியானம் எல்லாம் பொறுந்தி முற்றுபெற்ற பின்னரும் மணமகன் பகுதி அதிக சீதனம் கேடாபடியால் மனமுடந்த்த அப்பெண் தற்கொலை செய்துள்ளாள்..இச் செய்தி யாருகெல்லாம் தெரியும், அல்லது தெரிந்து சாதராணமான விடயம் என கடந்து போவதால் இது தான் நம் சமூகம் என ஆதரிக்கிறோமா?அல்லது அந்த பெண்ணை சமூகத்திலிருந்து நிராகரிக்கிறோமா?

தற்க்கொலை செய்துகொண்ட பெண் தாய் தந்தை இல்லாதவள் , படித்து கொழும்பில் வேலை செய்கிறாள், வேலையுள்ள நல்ல பெண்தான் அவளது அக்காவே கலியானப் பேச்சுக்கள் செய்து வைத்தாள், சீதனம் எல்லாம் பேரம் பேசி முன்னரே முற்றுப்பெற்றாகிவிட்டது, அவளும் தனது புது வாழ்க்கை பற்றி எத்தனையோ கனவுகளுடன் கணப்பொழுதுகளை இன்பமாய் கடந்திருப்பாள், புடவை நகைகள் வாங்கி எவ்வளவு அவளது மனம் புகழாங்கிதம் அடைந்திருக்கும்!!! இது இவ்வாரிருக்க மணமகன் பகுதியினர் இன்னும் அதிகமாக பேச்சுக்கு மேலதிகமாக சீதன்ம் கேட்கவே அவள் மனமுடந்துவிட்டாள், பெற்றோரை இழந்த்த அவளுக்கு அவளது அக்கா தானே கடன் பட்டு சீதனம் தர சம்மதித்தாள் இப்போது அதிக சீதன் கேட்டாள் அக்காஅவள் என்ன பண்ணுவாள்? எனக்காக சிரமப்படுவாள் , நான் அவளுக்கு பாரமாய் இருக்ககூடாது என்று அவள் உயிரை தானே பறித்திருக்கிறாள்.

அவள் என்னவெல்லாம் கனவு கண்டிருப்பாள், அவளின் வாழ்க்கையை பறித்தது எது மேலதிகாமாக கேட்ட ஒரிரு இலட்சங்கள் மாத்திரமா? அல்லது நமது சமூகமா?

எவ்வளவு தொகை என்பது கணக்கிலில்லை என்ன? என்பது தான் கதை..

ஒரு பெண்பிள்ளையை பெற்று அவளை வளர்த்து படிக்க வைத்து, சாமத்திய படமுன்னம் கவனிப்பு, சாமத்திய பட்ட பின்பு பிரத்தியேக கவனிப்பு , எவ்வளவு இடங்கள் ஏத்தி இறக்கி பெற்றோர் படிப்பிச்சு ஆளாக்கி விட்ட பிறகும் அவளினை கரை சேர்க்க ஏன் இந்த சமூகம் தடையாக இருக்கிறது என புரியவில்லை..

ஆண்களை வலிமையாய் படைத்தது பெண்ணை காக்கவே என்பது மறைந்து இன்று பெண் கன்னி கழியவும் சீதன சந்தையில் தகப்பன் காசு குடுக்க வேண்டிய செயலை எப்படி நாம் விபரிக்க?????

ஆண் எண்பவன் யார்? அவனது வலு என்ன? அவன் எவ்வாறு செயற்ப்பட வேண்டும்? சொல்லுங்கள்/ சிந்தியுங்கள் சகோதர்ர்களே(நானும் உட்பட) ஒரு பெண்ணுக்கு கூட உழைத்து சாப்பாடு போட்டு அவளின் வாழ்க்கையை பொறுபெடுக்காத எந்த ஒரு ஆணும் ஆண்மகன் என்று கூறிக்கொள்ள முடியுமா?
தான் வாழ்கயில் உயிர் பிழைக்கவும் தன் தலைமுறை காக்கவும் ஒரு பெண்ணிடம் காசு வாங்கி வாழ்க்கை ந‌டத்துபவனை என்ன சொல் கொண்டழைப்பது? என் எல்லோர் மனதிலும் தேடுங்கள் சகோதரர்களே தேடுங்கள்?

தற்ப்போது யாழ்ப்பாணத்தின் கலியாண சந்தையில் மாப்பிள்ளை பொருளுக்கான ரேட்டுக்களினை தெரிந்து கொள்வோம்
1. வேலை வெட்டியில்லாத மாப்பிள = 8 லட்சம் பணம், நகை 15பவுண், வீடு 1
2. கூலி வேலை மாப்பிள = 10 லட்சம் பணம் , நகை 15 பவுண், வீடு 1
3. தனியார் துறை சிறு சுய கடை மாப்பிள = 15 லட்சம் பணம் , நகை 20 பவுண், வீடு 1, வீட்டுப் பாத்திரம்
4.தனியார் துறை பெரு சுய கடை மாப்பிள= 18_20 லட்சம் பணம் , நகை 25 பவுண், வீடு 1, மோட்டச்சயிக்கிள் 1
5.அரசாங்க சிற்றூழியர் =18_20 லட்சம் பணம் , நகை 20‍/25 பவுண், வீடு 1
6.அரசாங்க வேலை மாப்பிள =30 லட்சம் பணம் , நகை 30 பவுண், வீடு 1 , வளவு 1, மோட்டச்சயிக்கிள் / கார்
7.டாக்குத்தர் மாப்பிள =80_100 லட்சம் பணம் , நகை 30 பவுண், வீடு யாழ்ப்பாணத்தில 1, கொழும்மில வீடு 1 , வளவு 1, கார்_01
8.இஞ்சீனியர் மாப்பிள =80_100 லட்சம் பணம் , நகை 30 பவுண், வீடு யாழ்ப்பாணத்தில 1, கொழும்மில வீடு 1 , வளவு 1, கார்_01

என இன்னும் பட்டியல் நீளலாம், இது நகச்சுவை தரவு என நீங்கள் மனதுக்குள் சிரித்தால் உங்களைப்போல முட்டாள் வேறு யாரும் இங்கில்லை.இவ்வாறு அமைகிறது தற்ப்போதைய சந்தை நிலவரம்.
இது இவ்வாறிருக்க பெண்ணைப்பெத்தவர்கள் பெண்ணை படிப்பிக்கவே எல்லாச் சொத்தும் அழிந்து விட கலியானத்துக்காக் வெளினாட்டு உறவுகளிடம் பல்லுக்காட்ட விளைகிறார்கள். ஒடாய் தேய்கிறார்கள்.
ஆண்கள் பிள்ளைகளை பெறுவதில் மட்டும் தங்கள் ஆண்மைகளை நிரூபித்துக்கொண்டிருக்கிறார்கள்.

உண்மைச்சம்பவங்களினை ஆதாரமாக தர முனைகிறேன்
#ஆதாரம் 1.
எனது சக நண்பன் ஒருவன் நல்ல வேலை பார்கிறான் அரசாங்க வேலைதான், கை நிறைய சம்பளம், அவனுக்கொறு தங்கை அவளோ மருத்துவம் படிக்கிறாள் , நாளை அவள் ஒரு வைதியர், அவனது பெற்றோர் பிள்ளைகளை ஆளாக்கவே சொத்துக்களை செலவளித்துவிட்டனர். அதுதான் சரியும் கூட.. எனினும் நண்பன் அவளுக்கு சீதனம் சேர்கவே தன் வேலைகளை திறந்த்துவிட்டு வெளிநாட்டுக்கு உழைக்க செல்ல ஆயத்தமாகிறான். நான் பேசினேன் நல்ல வேலை ஏன் விடுகிறாய் உன் தங்கை டொக்ரர் தாணே பிறகென்ன குறை விடு கவலையை என்றேன். அவனது பதிலோ இல்லை அவளுக்கு சீதனம் எதிர்பார்பார்கள் வீடு வாங்க வேண்டும், நகை சேர்க வேண்டும், சீதனம் சேர்க வேண்டும் ஆகவே நான் வெளிநாடு சென்றாகத்தான் வேண்டும் என்றான்.

ஒரு தங்கை கொண்டவன் அதுவும் டொக்ரர் பெண் அவள் அண்ணனே இவ்வளவு இங்கு கவலை கொள்கிறான் என்றால் பல தங்கைகள் அக்காக்களை கொண்ட தம்பிகள் அண்ணன்கள், தந்தைமார் எவ்வளவு துடிப்பார்கள்..எவ்வளவு ஓடாய் தேய்ந்து உழைப்பார்கள், இந்த இரத்தத்தைதானே மாப்பிள்ளை சீதனமாக உறுஞ்சுகிறான், சிறு வெக்கம் கூட வராதா என நினையுங்கள் தவறில்லை.

#ஆதாரம் 2
பல தெரிந்த நண்பர்களும் தெரியாத நண்பர்களும் சீதன மோகத்துக்காக தான் உயிராய் காதலித்த காதலிகளினை கைவிட்டு பிரிவதை பார்த்திருக்கிறேன்.
வாசிக்கும் உங்களுக்கும் இதுபோன்ற சம்பவங்களினை அறிந்திருக்கலாம்.

எனது சமூகத்தில் கோளாரா? அச் சமூகத்தை கட்டியெழுப்புவர்களின் கோளாரா என வினா தொக்கு நிக்கும் போது இது சமூகத்தை கட்டியெழுப்புபவர்களின் கோளாரே என உறுதியாக கூறலாம்.
ஏனெனில் கடந்த விடுதலைப் புலிகளின் ஆட்சிக்காலத்தில் தமிழர் தம் பிரதேசத்தில் சாதிய ஒடுக்கு முறையோ அல்லது இவ்வாறான சீதன ஒடுக்குமுறைகளோ இல்லாது காலம் ஒன்று இருந்ததை யாராலும் மறுக்கமுடியாது.எனவே தற்ப்போது சமூகதை வழி ந‌டத்துவோர்/ கட்டியெழுப்புவோர் ஆணிவேர்களில் பிழையிருக்கிறது.

இன்று சீதனக் கொடுமையால் இறக்கின்ற பெண்களிவிட திருமணம் ஆனபின்பும் சீதனம் கேட்டு அடிவாங்கும் / அவஷ்தைப்படும் பெண்களே அதிகம்.
அதைவிட சீதனம் இல்லாததனால் கலியான வயதையும் தாண்டிய முதிர் கண்னிகள் இப்போதும் நம் சமூகத்திடையே இருப்பது நமக்கு தெரியவில்லையா? அல்லது அவர்கள் மீது இந்த சமூகம் பார்வையை செலுத்தவில்லையா?

சீதனம் கேட்போரை அணுகி கேட்டால் உண்மை வெளிக்கும் சொல்வார்கள் “மகனுக்கு வாங்கினாதானே மகளுக்கு குடுகளாம்” ஆக வாங்கினால் குடுகலாம் என்ற கொன்செப்றை மாத்தி “வாங்கத்தேவையில்லை ஆகவே குடுக்கத்தேவையில்லை” என்ற உண்மையை ஏன என் சமூகம் இன்னும் இனம்காணவில்லை?

அன்றும் சரி இன்றும் சரி ஆண்பிள்ளையை தான் முதலாவதாக பெற்றெடுத்துவிட்டு பின் பெண்பிள்ளை பெற எல்லாருமே ஆசைப்படுகிறார்கள். தொடர்ச்சியாக பெண்பிள்ளைகளை பெற்றோர் கூட எங்கே உழைகவும் சீதனம் கொடுக்கவும் எனகொரு ஆண்மகன் மீட்பனாக வேண்டும் என்று கடின உழைப்பு காட்டி பெற்றவரும் உண்டு, ஏமாந்தவருமுண்டு.
எனது சமூகம் ஒருவனுக்கொருத்தி என்ற வரைமுறையை வைத்ததன் அர்த்தப்பாடு அவளோடு அளவான சொத்தோடு இன்பமாய் வாழ் என தான். மற்றய இனங்களில் ஆண்கள் கடுமையாக உழைத்து சொத்து சேர்கிறார்கள் ஆகவே ஒருத்தனுக்கு ஒன்பத்தி என்று கோட்பாடு..அவர்கள் சீதனம் கேட்பதில்லை அங்கே ஆண்மையை நிறூபித்து அதிலும் ஆண்மையை நிறூபிக்கிறார்கள். இதனால் கலியான ஈடேறாது இருக்கும் தமிழ் பெண்களை அவர்ல்கள் மதம் மாறி மணம் முடிக்கிறார்கள் சீதன்ம் இன்றி.. இதை எதிர்க்க யாரும் முடியாது? ஏனென்றால் எம் இனத்தில் ஆண்மகன் இல்லாததால் அவள் முடிவு சரியாகிறது. இப்படியே எமது சமூகத்தின் சீதன நிலவரம் ஆகயாத்தை நோக்கி போகும் போது ஆண் பெண் விகிதாசாரம் சட்டென்று குறந்த்து அங்கே “ஒருத்தனுக்கு ஒருத்தி” வலுவிழக்கும் காலம் கண்னெதிரே கூட தோன்றலாம்.
இன்று பல பெற்றோர்கள் மனதுக்குள் நினைத்துக் கொள்ளும் விடயம் என்னவென்றால் ” என் மகள் யாறையாவது ல்வ் பண்ணினால் சந்தோசம் , சீதன்ம் குடுக்க வக்கில்லை” என்றுதான்,,,ஆனால் வெளியே யாரும் காட்டிக் கொள்ளமாட்டார்கள்.

எமது கலாச்சாரம் பிழையென நான் வாதிடவில்லை, என் மரபுகள் பிழயென நான் வாதிடவில்லை, என் இனத்தின் மரபுகள் ஏதோ நன்மைக்காகவே உருவாக்கப்பட்டன சீதனம் என்ற பொருளுடமையும் நன்மைகாகவே உருவாக்கப்பட்டது ஆனால் எம் இனத்தின் கூர்ப்பு வழி வந்தவர்கள் அதனை விகாரத்துக்கு இட்டுச் சென்றதே இன்று விவகாரமாக மாறியுள்ளது.
ஆண் என்பவன் தன்னை நம்பி கரம்பிடிக்கும் ஒரு பெண்ணின் வாழ்கையை தன்காசில் பார்காதவனை நான் பெண் எனக்கூட இங்கு விழிக்கமாட்டேன்.
இன்றைய எமது தமிழ் பெண்கள் ஆண்களை விட நன்றாய் படிக்கிறார்கள், நல்ல வேலை செய்கிறார்கள்,கை நிறைய சம்பாதிக்கிறார்கள் ஆண்களை விட பெண்கள் அதிவேகமாக கல்வியிலும் பொருளாதாரத்திலும் மேம்பட்டுவிட்டார்கள், அவர்களே அவர்களுக்கான சீதனத்தை சேர்த்துகொள்கிறார்கள், லோன் போட்டு வீடு கட்டி சீதனம் குடுக்கிறார்கள், இதில் பாரதி கண்ட புதுமை பெண் இங்கே காண்கிறோம். காலக்கொடுமை என்னவென்றால் இவ்வாறான் பெண்களிடமும் அதிக சீதனம் வாங்குவது தான்.

பெண்களின் அசுர வேக வளர்சியால் இன்னும் சில தசாப்தங்களில் பெண்களுக்கு சீதன்ம் கொடுத்து ஆண்கள் கலியானம் கட்டும் காலம் வரும் என்பதில் வியப்பில்லை..அதுதான் நேர்த்தியும் கூட .

இதை வாசித்துவிட்டு எழுதிறார் இவர் வாங்காமல் விடபோகிறாரா? என்ற உங்களீன் கேள்விகளுக்கு பதில்கள் தர்வேற்றப்படும் கால ஓட்ட்டத்தில்..
நான் சீதன்ம் பிழயென்று வாதிடவில்லை
#தந்தால்_வாங்கு‍‍_கேட்டு_வாங்காதே”

நன்றி
கு.மதுசுதன்