சட்டம் ஒழுங்கு அமைச்சராக ரஞ்சித் மத்துமபண்டார நியமனம்

ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினரான ரஞ்சித் மத்துமபண்டார சட்டம் ஒழுங்கு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

முன்னதாக, சட்டம் ஒழுங்கு அமைச்சுப் பதவி பீல்ட் மார்சல் சரத் பொன்சேகாவிடம் வழங்கப்படும் என தகவல்கள் வெளியாகியிருந்தன.

சரத்பொன்சேகாவிற்கு அமைச்சுப் பதவி வழங்கப்பட வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சி கோரிக்கை விடுத்து வருகின்றது.

எனினும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனை ஏற்றுக்கொள்ளவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், ரஞ்சித் மத்தும பண்டார இன்றைய தினம் ஜனாதிபதி முன்னிலையில் சட்டம் ஒழுங்கு அமைச்சராக பதவிப் பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.

அண்மையில் இடம்பெற்ற அமைச்சரவை மாற்றத்தில் சாகல ரட்நாயக்கவிடம் இருந்த சட்டம் ஒழுங்கு அமைச்சு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு வழங்கப்பட்டது.

எனினும் குறித்த பதவி நிரந்தரமில்லை எனவும், விரையில் மாற்றம் வரும் எனவும் தெரிவிக்கப்பட்ட நிலையில் இன்று சட்டம் ஒழுங்கு அமைச்சராக ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினரான ரஞ்சித் மத்துமபண்டார நியமிக்கப்பட்டுள்ளார்.