இணையத்தை புரட்டி போட்டுக் கொண்டிருக்கும் புரட்சி தமிழனின் வீடியோ!

திரிபுராவில் பா.ஜ.க அரசு புரட்சியாளர் லெனின் சிலையை அகற்றியதையடுத்து, தமிழகத்தில் பெரியார் சிலை உடைக்கப்படும் என பா.ஜ.க தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியதையடுத்து தமிழகத்தில் அவருக்கு பல்வேறு தரப்புகளிலிருந்து கண்டனங்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில், நேற்று இரவு திருப்பத்தூரில் உள்ள பெரியார் சிலை உடைக்கப்பட்டுள்ளது. இதனால் பல இடங்களில் கலவரங்களும் ஏற்பட்டு வருகின்றன.

— Sibi (Sathya)raj (@Sibi_Sathyaraj) March 7, 2018

இத்தருணத்தில், தமிழக மண்ணுக்காக தைரியமாக குரல் கொடுத்து வரும் நடிகர் சத்யராஜ் பேசிய வீடியோ ஒன்று வைரலாகியுள்ளது.

அந்த வீடியோவில், தந்தை பெரியார் என்பது சிலையும் பெயரும் அல்ல, உழைப்பவர்களின் அடையாளம். எந்த ரானுவத்தாலும் எங்கள் உள்ளங்களில் உள்ள பெரியாரின் நினைவை அகற்ற முடியாது.

மேலும், நேரம் குறித்து திகதி குறித்தால் பெரியார் தொண்டர்கள் சவாலை ஏற்க தயாராக உள்ளனர்.

தமிழர்களிடம் எச்.ராஜா மண்னிப்பு கேட்க வேண்டும். தமிழக அரசு அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஆதங்கத்தில் புரட்சி தமிழன் சத்யராஜ் பேசிய வீடியோ தற்போது மிகவும் வைரலாக அனைவராலும் பகிரப்பட்டு வருகிறது.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like