செல்பி எடுத்ததிற்காக இந்நிலை

கிழக்கில் இன ஒற்றுமைக்கு வேட்டு வைக்கும் செயற்பாடாக முஸ்லிம் இளைஞர்கள் சிலரால் வீதியால் சென்ற தமிழ் இளைஞன் மீது தாக்குதல்சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதை அடுத்து அங்கு பதட்டநிலை தோன்றியுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

 கிழக்கு மாகாணம் அம்பாரை மாவட்டம் அக்கரைப்பற்றில் இன்று காலை முஸ்லிம்கள் இளைஞர்கள் சிலர் வீதியால் சென்றவர்களிற்கு இடையூறு செய்யும் வகையில் நடந்துகொண்டதாக தெரியவருகின்றது.

அச்சமயம் தமிழ் இளைஞர் ஒருவர் தனது கைபேசியில் புகைப்படம் எடுத்து அதனை முகப்புத்தகத்தில் பதிவேற்றியுள்ளார்.

இதனை அவதானித்த சில முஸ்லீம் இளைஞர்கள் சேர்ந்து அவரை தாக்கியுள்ளார்கள். ஊர்வலம் எனும் பெயரில் வீதியை மறித்து மணிக்கூட்டு கோபுரத்தை சூழவுள்ள தமிழ் முஸ்லிம் மக்கள் பொதுவாக நடமாடும் பகுதியில் ஆர்ப்பாட்டம் செய்யும் போது அவ்வீதியால் சென்ற தமிழர் தமது கைத்தொலைபேசியில் போட்டோ எடுத்ததை காரணம் காட்டி தாக்கிய செயல்பாடு தமிழ் இளைஞர்கள் மத்தியில் உடனடியாக கொண்டுசெல்லப்பட்டுள்ளது.

இதனால் அங்கு திரண்ட தமிழ் இளைஞர்களிற்கும் முஸ்லீம் இளைஞர்களிற்குமிடையில் வாக்குவாதம் முற்றியுள்ளது, சம்பவம் அறிந்து விரைந்த பொலிசார் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

இந்த இனவாதியின் பதிவை பாருங்கள்.. ஏற்கனவே நான்கு பேர் செய்த வேலையால் ஒரு சமூகத்திற்கு இப்படியான இன வெறி தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் வேளையில் இன்னும் இன்னும் இப்படியான சம்பவங்கள் இடம்பெறகூடாது .

இரு சமூகமும் ஒருவரையொருவர் பகைத்துகொள்லாமல் அமைதியாக இருக்கவும். மற்றவர்களின் மன நிலையை அறிந்து மனித தன்மையாக நடந்துகொள்ளவும்.

இதேவேளை, கண்டி மாவட்டத்தின் திகன, தெல்தெனிய உள்ளிட்ட பிரதேசங்களில் இடம்பெற்ற வன்முறைகளை அடுத்து, அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களில் இன்று (06) பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகின்றது.

அம்பாரை மாவட்டத்தின் முஸ்லிம், தமிழ் பிரதேசங்களில் முற்று முழுதாக வர்த்தக நிலையங்கள், அரச, தனியார் அலுவலகங்கள், பாடசாலைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதுடன், எதுவித போக்குவரத்துகளும் இடம்பெறவில்லை.

அக்கரைப்பற்று பிரதேச பிரதான பாதைகளில் கறுப்புக்கொடி கட்டப்பட்டு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், பாதைகளில் பொலிஸ், இராணுவம், விசேட அதிரடிப்படை பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை, மருதமுனை பிரதேசத்தில் இலங்கைப் போக்குவரத்து சபைக்குச் சொந்தமான இரண்டு பஸ்கள் மீது கல்வீச்சுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதனால் கண்ணாடிகள் உடைந்த நிலையில் குறித்த பஸ்கள், கல்முனை பொலிஸ் நிலையத்துக்கு எடுத்து செல்லப்பட்டிருந்தன.

இதனைத் தொடர்ந்து, கல்முனையில் இருந்து மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் அக்கறைப்பற்றுக்கான பஸ் போக்குவரத்துகள் இடம்பெறவில்லை.

மேலும், மருதமுனையில் கல்முனை- மட்டக்களப்பு நெடுஞ்சாலையில் டயர்கள் எரிக்கப்பட்டும் மரக்குற்றிகள் மற்றும் கொங்க்ரீட் தூண்கள் போடப்பட்டும் வீதித் தடைகள் ஏற்படுத்தப்பட்டன. இதனால் போக்குவரத்துகள் முற்றாக தடைப்பட்டிருந்ததுடன், அங்கு இளைஞர்கள் ஒன்றுதிரண்டு கண்டனப் பேரணி ஒன்றையும் நடத்தினர்.