காப்புறுதியால் பலியாகும் உயிர்கள்

இலங்கை காப்புறுதி நிறுவனத்தால் ஏமாற்றப்பட்டதன் விளைவாக நஞ்சருந்திய நிலையில் மீட்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த குடும்பஸ்தர் சிகிச்சை பலனின்றி இரண்டு நாட்களின் பின்னர் உயிரிழந்துள்ளார்

சாவகச்சேரி சரசாலை வடக்கை சேர்ந்த 6 பிள்ளைகளின் தந்தையான சின்னப்பு கெங்காதரன் (வயது 61) என்பவரே மேற்படி உயிரிழந்தவராவார்.

இவர் சொந்தமாக பாரவூர்தி ஒன்றை வைத்திருந்துள்ளார். கடந்த பெப்ரவரி மாதம் 17 ஆம் திகதி மதவாச்சி பகுதியில் எரு ஏற்ற சென்ற போது பாரவூர்தி விபத்துக்குள்ளாகியுள்ளது.

பாரவூர்தியை திருத்தம் செய்வதற்கு உரிய பணத்தை இவர் காப்புறுதி செய்த நிறுவனத்திடம் இருந்து பெறுவதற்கு முயற்சி செய்துள்ளார். ஆனால் குறித்த நிறுவனம் அவருக்கு பணத்தை கொடுக்காது தொடர்ச்சியாக பின்னடித்து வந்துள்ளது.

இதனால் மன உழைச்சலுக்கு உள்ளான இவர் கடந்த முதலாம் திகதி தனது தோட்டத்தில் இருந்த நஞ்சு மருந்தை குடித்துவிட்டு மயங்கிய நிலையில் இருந்துள்ளார்.

இவர் மயங்கிய நிலையில் இருப்பதை கண்ட அயலவர் ஒருவர் உறவினர்களுக்கு தகவலை தெரிவித்து உடனடியாக சாவகச்சேரி வைத்திய சாலைக்கு கொண்டு சென்று பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது ஆனால் சிகிச்சை பலனின்றி 2 நாட்களின் பின்னர் நேற்று உயிரிழந்துள்ளார்.

இந்த மரண விசாரணையை தென்மராட்சி பிரதேச மரண விசாரணை அதிகாரி கே. இளங்கீரன் மேற்கொண்டிருந்தார்.

இதேவேளை, யாழ்ப்பாணத்தில் உள்ள பிரசித்தி பெற்ற காப்புறுதி நிறுவனமான செலிங்கோ காப்புறுதி நிறுவனத்தில் பணிபரியும் பெண் ஊழியர் ஒருவர் அதே நிறுவனத்தில் உயரதிகாரியாக உள்ள ஆண் ஒருவரின் அச்சுறுத்தல் காரணமாக (Black Mail) நஞ்சருந்தி தற்கொலைக்கு முயற்சித்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது –

குறித்த நிறுவனத்தில் பணிபுரியும் பெண் உத்தியோகத்தர் ஒருவரை அதே நிறுவனத்தில் பணிபரியும் அதிகாரி ஒருவர் குறித்த பெண் வேறொருவருடன் உரையாடிய சம்பவம் ஒன்றை பதிவுசெய்து வைத்திருந்ததாகவும் அதனை வைத்துக்கொண்டு குறித்த பெண்ணிடம் தகாத முறையில் அணுகி அப்பெண்ணை துன்புறுத்தியதாகவும் இதனால் மனமுடைந்துபோன குறித்த பெண் ஊழியர் தற்கொலை செய்துகொள்ள முயற்சித்துள்ளார் என்றும் தெரியவருகின்றது.

குறித்த காப்புறுதி நிறுவனத்தில் பணிபுரியும் உயரதிகாரிகள் பலர் இவ்வாறான பல சம்பவங்களை மேற்கொண்டு வந்துள்ளதால் இங்கு பணியாற்றிய பெண்கள் மட்டுமல்லாது அங்கு வாடிக்கையாளர்களாக உள்ள பல பெண்களும் பெரும் துன்பங்களை அனுபவித்து வந்த சம்பவங்களும் ஏற்கனவே வெளியாகியிருந்தது.

ஆனாலும் அந்த நிறுவன அதிகாரிகள் தமது அதிகாரத்தால் அவற்றை மூடிமறைத்து வந்திருக்கின்றனர்.

அதுபோலவே இந்த சம்பவமும் திட்டமிட்ட வகையில் குறித்த ஆண் அதிகாரியால் அரங்கேற்றப்பட்டுள்ளதுடன் அப்பெண்ணை தனது பிரத்தியேக அந்தரங்க தேவைக்காக பயன்படுத்துவதற்காகவே மிரட்டியுள்ளார் என தெரியவருகின்றது.

யாழ்ப்பாணத்து கலாசாரத்தை மட்டுமல்ல யாழ்ப்பாணத்து மக்களையும் நிர்வாணமாக பார்ப்பதற்காகவே இந்த காப்புறுதி நிறுவனங்கள் இயங்குகின்றன. ஆனாலும் எமது மக்களும் அந்த கொள்ளையர்களை நம்பி தமது பணங்களை இறைத்துவருவது மட்டுமல்லாது தமது கௌரவங்களை மட்டுமல்லாது குடும்ப மானங்களையும் பத்திரிகை செய்தியாக்கி வருவது வேதனையானது. மக்களே இது உங்கள் கவனத்திற்கு!

(குறிப்பு: – குறித்த நிறுவனத்தின் பிராந்திய பொறுப்பாளர் மற்றும் இதர பல அதிகாரிகளின் கீழ்த்தனமான தகவல்கள் அடங்கிய திரட்டுக்கள் பல எம்மிடம் பாதிக்கப்பட்ட தரப்புகளால் வழங்கப்பட்டுள்ளன. அவை விரைவில் மக்கள் மத்தியில் வெளிடப்படும்)

நன்றி : jaffna7tamil

Get real time updates directly on you device, subscribe now.

You might also like