கண்டியில் முஸ்லிம்களின் பெருமளவு சொத்துக்கள் அழிவு

கண்டி மாவட்டத்தில் உள்ள திகண மற்றும் தெல்தெனிய பகுதிகளில் நடத்தப்பட்ட இனவாத தாக்குதல்களில் முஸ்லிம்களின் பெரும் எண்ணிக்கையான வீடுகள், சொத்துகளும், பள்ளிவாசல்களும் அழிக்கப்பட்டுள்ளன.

04 பள்ளிவாசல்கள், 37 வீடுகள், 46 வாணிப நிலையங்கள், 35 வாகனங்கள் அழிக்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாணசபை உறுப்பினர், ஹிதாயத் சத்தார் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, கண்டி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு, நிலைமைகளை மதிப்பீடு செய்வதற்காக அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தலைமையிலான நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழுவொன்று கண்டிக்குச் சென்றுள்ளது.

விமானப்படையின் சிறப்பு உலங்குவானூர்தி மூலம் இவர்கள் நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றனர்.