பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர கட்சியின் உறுப்பினர்கள் தயார்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர கட்சியின் உறுப்பினர்கள் தயாராகி வருவதாக இன்று யாழ் விஐயம் மேற்கொண்ட சுற்றுலாத்துறை மற்றும் கிறீஸ்தவவிவகார அமைச்சரிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த அமைச்சர்…தான் இந்த விடயத்தை பத்திரிகையில் தான் பார்த்ததாகவும் தாம் அப்படியொரு செயற்பாடு கட்சிக்குள் இடம்பெறவில்லையெனவும் மக்களினால் வழங்கப்பட்ட ஐந்து வருட ஆணையை நிறைவேற்ற தான் இந்த நல்லாட்சி அரசு முனைவதாகவும் எனினும் ஐந்து வருட காலத்திற்கு குழப்பமில்லாது இந்த அரசை கொண்டுசெல்ல தாம் எத்தனிப்பதாகவும் அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்ததோடு.குறிப்பாக வெளிநாடுகளில் உள்ள புலம்பெயர்ந்த தமிழ் மக்களிடம் ஒரு கோரிக்கையை முன்வைப்பதாகவும்.
அதாவது இலங்கையிலுள்ள தமிழ் மக்களுக்கு ஏதாவது நன்மைபுரியவேண்டும் என நினைத்தால் வடக்கில் முதலிடுங்கள் குறிப்பாக சுற்றுலாத்துறையில் முதலிட முன்வருமாறு புலம்பெயர்ந்துள்ள தமிழ் மக்களுக்கு தான் அழைப்பு விடுவதாகவும் அமைச்சர் தெரிவித்ததோடு.குறிப்பாக வடக்கில் இயற்கை வளம் நிறைந்த இடங்கள் பல காணப்படுகின்றன.எனவே புலம்பெயர்ந்த மக்கள் முதலிடுவதன் மூலம் வடக்கில் உள்ள வேலைவாய்ப்ற்ற பிரச்சனையையும் முடிவுக்கு கொண்டுவர முடியும் எனவும் தெரிவித்தார்