10 கிலோ கேரள கஞ்சாவானது நெல்லியடி பொலிஸாரல் கைப்பற்றப்பட்டுள்ளது (வீடியோ)

யாழ்ப்பாணம் நெல்லியடி பகுதியிலிருந்து கடத்த முற்பட்ட 10 கிலோ கேரள கஞ்சாவானது நெல்லியடி பொலிஸாரல் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பாக 5 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்றைய தினம் இரவு நெல்லியடி பொலிஸாருக்கு கிடைக்கப்பட்ட தகவலையடுத்து வதிரி பகுதியில் வைத்து வீட்டொன்றில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளது. இதன்போது பிரதான சந்தேகநபர் தப்பிச் செல்ல எனைய 5 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 10 கிலோ கேரள கஞ்சா மற்றும் வடி ரக வாகனமொன்று, முச்சக்கரவண்டி ஒன்று, மற்றும் மோட்டார் சைக்கிள் என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளன.

Get real time updates directly on you device, subscribe now.