ஆமியுடன் சேர அலையும் நிலா – படங்கள்

ஆவா குழுவின் முக்கிய அங்கத்தவரான நிலா என்று அழைக்கப்படும் துர்நடைத்தையான யுவதி ஒருவர் யாழ்ப்பாணத்தில் உள்ள படைத்தரபிடம் வேலை கேட்டு விண்ணப்பித்துள்ளதாக பொலிஸ் வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கசிந்துள்ளன.

சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த அரசியல் முக்கியஸ்தரை தனது கைக்குள் போட்டுக் கொண்ட நிலா அவரூடாக பலாலி இராணுவக் கட்டளைத் தலைமையகத்திடம் வேலை கேட்டு விண்ணப்பித்துள்ளார். அத்துடன் தனக்கு இவ்வாறு வேலை கேட்டு விண்ணப்பித்ததால் சிலர் கொலை அச்சுறுத்தல் தருவதாகவும் படைத்தரப்பிடமும் பொலிஸ் தரப்பிடமும் முறைப்பாடு செய்துள்ளார்.

இதே வேளை குறித்த வேலை வாய்ப்புக்காக பொலிஸ் கிளியறன்ஸ் பெற்று வருமாறு நிலாவுக்கு பலாலிப் படைத்தரப்பு அறிவுறுத்திய போதும் பொலிசார் நிலாவுக்கான பொலிஸ் கிளியறன்சைக் கொடுக்கவில்லை எனவும், அவள் ஆவா குழுவுடன் தொடர்புபட்டுள்ளதாக ஊடகங்களில் தகவல்கள் வந்ததாலேயே, பொலிஸ் கிளியறன்ஸ் தங்கள் கொடுக்கவில்லை எனவும் பொலிசார் பலாலி ஆமிக்காரர்களிடம் தெரிவித்துள்ளார்கள் என பொலிஸ் தரப்பிலிருந்து தகவல்கள் வந்துள்ளன.

பாதுகாப்பு அமைச்சின் கீழ் பலாலி படைமுகாம்களில் பண்ணை வேலைகளில் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ள முன்னாள் போராளிகள் மற்றும் இளைஞர், யுவதிகள், குறித்த நிலாவை தம்முடன் வேலைக்கு அமர்த்தினால் தமக்கும் கேவலமான செயற்பாடுகளை பழக்கி விடுவார் எனவும் அத்துடன் படையினரிம் தாங்கள் தொடர்பாக இருக்கும் மரியாதையையும் கெடுத்துவிடுவார் எனவும், நிலா தொடர்பான செயற்பாட்டை அறிந்து ஊடகவியலாளர் சிலரிடம் தெரிவித்துள்ளனர்.

இதே வேளை பலாலி ஆமிக்காரர்கள்தான் ஆவா குழுவை வழி நடாத்தி வந்தார்கள் என பொதுமக்கள் மத்தியில் பரவலான சந்தேகங்கள் எழுந்திருந்தன.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like