போர்க்குற்ற சாட்சியமாகும் வடக்கு மாகாண சபை உறுப்பினரின் உரை

வடக்கு மாகாணசபையின் புதிய உறுப்பினராகப் பதவியேற்ற சபாரட்ணம் குகதாஸ் நேற்று நிகழ்த்திய, முதல் உரையில் இறுதிப்போரில் நிகழ்ந்த போர்க்குற்றங்கள் தொடர்பான சாட்சியங்களை முன்வைத்தார்.

வடக்கு மாகாணசபையின் நேற்றைய அமர்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில், ச.குகதாஸ் புதிய உறுப்பினராக பதவியேற்றார்.

அவர் நேற்று தனது உரையில், இறுதிப்போர் நடந்த பகுதிகளில் தான் நேரடியாக அனுபவித்த இன்னல்கள், போர்க்குற்றங்கள், அகதிமுகாம்களில் நடத்தப்பட்ட விதம், இராணுவத்தினரின் அதிகார மீறல்கள் தொடர்பாக விபரித்திருந்தார்.

அவர் உரை நிகழ்த்தி முடிந்ததும், போர்க்குற்ற சாட்சியமாக உள்ள இந்த உரையை, ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்குமாறு பேரவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானத்திடம், வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கோரிக்கை விடுத்தார்.

அதனை ஏற்றுக் கொண்ட பேரவைத் தலைவர், ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு, உறுப்பினர் குகதாசின் உரையை அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.