யாழ். மாவட்டச் செயலகத்தில் குரங்குகளின் தொல்லை

யாழ். மாவட்டச் செயலகத்தில் அதிகரித்துக் கானப்படும் குரங்குகளின் தொல்லையை கட்டுப்படுத்த விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

தென்மராட்சிப் பகுதிகளில் இருந்து கடந்த சில மாதங்களிற்கு முன்னர் நகர்ப்புறத்திற்குள் ஊடுருவிய நிலையில் அவை மாவட்டச் செயலகத்தின் கட்டிட உட்பகுதிகளிற்குள் மறைந்து வாழ்ந்து தற்போது பெருகி வருகின்றன.

இவ்வாறு ஆரம்பத்தில் 5 வரையில் கானப்பட்ட குரங்குகள் தற்போது பத்துவரையில் கானப்படுகின்றது. இவ்வாறு கானப்படும் குரங்குகள் காலை மாலை வேளைகளில் மாவட்டச் செயலக வளாகத்தில் ஊளாவி வருவதோடு வாகனங்களின் கண்ணாடிகளை பிடுங்கிச் செல்வதோடு தலைக் கவசங்களையும் சேதப்படுத்துகின்றது.

இவ்வாறு வெளியாரின் உடமைகளைச் சேதபடுத்தும் குரங்குகள் செயலக கட்டிடத்தின் கூரைத் தகடுகளை பிரித்தும் உட் சென்று தங்குவதனால் எதிர் காலத்தில் பாரிய சுகாதார சீர்கேடுகளும் ஏற்படும் அபாயமும் பொதுமக்கள் சொத்தை சேதப்படுத்தும் குரங்குகள் மக்கள் மீது தாக்கும் நிலமை ஏற்பட முன்னர். மாவட்டச் செயலகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடப்படுகின்றது.

இதேநேரம் குறித்த விடயம் தொடர்பில் ஏற்கனவே பல தடவை கரிசணை கொண்டு உரிய தரப்புக்களிற்கு தெரியப்படுத்தியும் அவை பிடிக்க முடியாத சூழலில் ஓர் பாரிய கூடு தரிவித்து அதன் மூலம் அவற்றினை பிடிப்பதற்காக கூடும் பொருத்தப்பட்டுள்ளது. இருப்பினும் குரங்குகள் அந்தக் கூட்டின் பக்கமே செல்லாது வெளியிலேயே சேதங்களை ஏற்படுத்துகின்றன. எவ்வாறாயினும் குறித்த குரங்குகளை கட்டுப்படுத்த ஓர் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்டச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தனர்.