சிவாஜிலிங்கத்திற்கு எதிராக முல்லைத்தீவில் வழக்கு

அரச சொத்துக்கு சேதம் விளைவித்தமை தொடர்பான குற்றாச்சாட்டின் அடிப்படையில் வடமாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கத்திற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 23ஆம் திகதி முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில் கடற்படையினர் சுவீகரித்துள்ள பொதுமக்களின் 617 ஏக்கர் பரப்பளவுடைய காணிகளை நில அளவீடு செய்வியருந்த நிலையில் அவற்றை எதிர்த்து அப்பகுதி மக்களும் மக்கள் பிரதிநிதிகளும் வட்டுவாகல் கடற்படை முகாமிற்கு முன்பாக எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில் நில அளவீடு செய்யவந்த அரச அதிகாரிகளின் வாகனத்தை வடமாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் சேதமாக்கியுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டு இந்த வழக்கு தொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் குறித்த வழக்கு விசாரணை நாளை முல்லைத்தீவு நீதிமன்றில் எடுத்துக்கொள்ளவிருப்பதாக பொலிஸ் நிலையத்தகவல்களில் குறிப்பிடுகின்றன

Get real time updates directly on you device, subscribe now.

You might also like