அரசின் மீது ஏற்பட்ட மக்களின் வெறுப்பே தேர்தல் முடிவுகள்!

அரசாங்கத்தின் பலவீனம் குறித்து மக்களிடம் ஏற்பட்டுள்ள வெறுப்பு தேர்தல் முடிவுகளில் வெளிக்காட்டப்பட்டுள்ளது என்பதால், அரசாங்கத்தில் பலமிக்க மறுசீரமைப்பை மேற்கொள்ள வேண்டும் என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

ஜாதிக ஹெல உறுமயவின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

2015 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் திகதி மக்கள் எதிர்பார்த்த முடிவுகளை பெற்றுக்கொடுப்பதற்காக ஜனவரி 8 சக்திகள் ஒன்றாக இணைய வேண்டும் என்பதை தேர்தல் முடிவுகள் காட்டியுள்ளன.

கட்சியை கட்டியெழுப்பும் விடயங்கள் அல்லது பெருமை பேச்சுக்களை கைவிட்டு, உரிய வேலைத்திட்டத்தின் கீழ் இணைந்து பலன் தரும் வகையில் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சி முறை, அதனால் ஏற்பட்ட தீர்மானங்களை எடுக்கும் மந்தநிலை போன்றவற்றால் மக்கள் மத்தியில் போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதற்காக தெளிவான பலமிக்க மறுசீரமைப்பு அவசியம் என்ற யோசனையை நாங்கள் அனைவருக்கும் முன்வைக்கின்றோம் எனவும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.