இலங்கையில் வாகன இலக்கத் தகடுகளில் வரப் போகும் மாற்றம்!!

நவீன வாக­னங்­க­ளுக்­காக, இலக்­கத் தக­டு­க­ளின் நீளத்­தைக் குறைப்­ப­தற்கு அரசு நட­வ­டிக்கை எடுத்­துள்­ளது. அத்­து­டன் முன்­பக்க இலக்­கத் தகட்­டுக்கு கட்­ட­ணம் அற­வி­ட­வும் அரசு தீர்­மா­னித்­துள்­ளது. இந்­தத் தக­வலை, போக்­கு­வ­ரத்து மற்­றும் சிவில் வானூர்தி சேவை­கள் பிரதி அமைச்­சர் அசோக அபே­சிங்க நாடா­ளு­மன்­றத்­தில் தெரி­வித்­தார்.

மோட்­டார் வாக­னச் சட்­டத்­தின் கீழ் ஒழுங்கு விதி­கள் மீதான விவா­தம் நேற்று முன்­தி­னம் இடம்­பெற்­றது. இதன்­போதே அவர் மேற்­கண்­ட­வாறு கூறி­னார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது: இலங்­கை­யில் 77 இலட்­சம் வாக­னங்­கள் பதிவு செய்­யப்­பட்­டுள்­ளன. 2017ஆம் ஆண்­டில் மாத்­தி­ரம் 12 இலட்­சத்து 16 ஆயி­ரத்து 805 இலக்­கத் தக­டு­கள் விநி­யோ­கம் செய்­யப்­பட்­டுள்­ளன.

ஒரு மாதத்­துக்கு சுமார் ஒரு இலட்­சம் வரை­யான இலக்­கத் தக­டு­கள் விநி­யோ­கம் செய்­யப்­ப­டு­கின்­றன. புதிய வாக­னங்­க­ளில் முன்­பக்­கத்­தில் சமிக்ஞை கரு­வி­யொன்று (சென்­சார்) உள்­ளது.வாகன இலக்க தக­டு­க­ளின் அளவு பெரி­தாக இருப்­ப­தால் முன்­னுக்கு வரும் வாக­னங்­க­ளின் தர­வு­க­ளைப் பெறும் சமிக்ஞை தொழில்­நுட்­பக் கருவி (சென்­சார்) மறைக்­கப்­ப­டு­கின்­றது.

520 மில்­லி­மீற்­றர் நீள­மாக உள்ள வாகன இலக்­கத் தக­டு­க­ளின் நீளத்தை 280, 180, 200 மில்­லி­மீற்­றர் என்ற அள­விற்கு குறைக்­க­வுள்­ளோம்.வாக­னங்­க­ளின் முன்­பக்க வெள்ளை நிற இலக்­கத் தக­டு­க­ளுக்கு கட்­ட­ணம் அற­வி­ட­வுள்­ளோம். இலங்­கை­யில் 52 இலட்­சம் குடும்­பங்­க­ளுக்கு 71 இலட்­சம் வாக­னங்­கள் உள்­ளன. மோட்­டார் சைக்­கிள் 39 இலட்­ச­மும், முச்­சக்­க­ர­வண்­டி­கள் 11 இலட்­ச­மும், சாதா­ரண மோட்­டார் வாக­னங்­கள் 7 இலட்­ச­மும் உள்­ளதெனவும் அவர் மேலும் கூறியுள்ளார் .

Get real time updates directly on you device, subscribe now.

You might also like