மூன்றாவது மாடியிலிருந்து விழுந்த சிறுவனை மின்னல் வேகத்தில் காப்பாற்றிய பொலிஸ் அதிகாரி (வைரலாகும் காணொளி)

பொலிஸ் அதிகாரி ஒருவர் தனது சாதூர்ய செயலால் சிறுவன் ஒருவனை காப்பாற்றிய சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

எகிப்து நாட்டின் அசியுட் மாகாணத்துக்கு உட்பட்ட பகுதியில் 5 வயது சிறுவன் ஒருவன் குடியிருப்பின் மூன்றாவது மாடியின் பால்கனியில் தொங்கியவாறு இருந்துள்ளான்.இந்தக் காட்சியினைப் பார்த்த அப்பகுதி மக்கள் மக்கள் பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

இதன் பின்விரைந்த பொலிசார் சிறுவனை மீட்கும் நடவடிக்கையில் இறங்கினர். அதில் ஒருவர், ஒரு போர்வையை எடுத்து சிறுவனை தாங்கிப்பிடிப்பதற்காக தயார் செய்தார்.மற்றொருவர் அருகில் உள்ளவர்களை உதவ வருமாறு அழைக்க சென்றார். மூன்றாவது பொலிஸ் அதிகாரி சிறுவனுக்கு நேராக கீழே நின்று கைகளால் பிடிக்க தயாரானார்.

குறித்த சிறுவன் நிலைதடுமாறி விழுந்த போது மூன்றாவதாக நின்ற பொலிஸ் அதிகாரி சிறுவனை காயம் ஏதும் இன்றி காப்பாற்றியுள்ளார். இந்தக் காட்சிகள் அனைத்தும் அருகில் இருந்த சிசிடி கேமராவில் பதிவாகியுள்ளது.

இதனையடுத்து மூன்றாவது பொலிஸ் அதிகாரியின் சாதூர்யத்தை பாராட்ட அந்நாட்டு அரசு முடிவெடுத்துள்ளது.பின்பு குறித்த வீடியோவை உள்துறை அமைச்சகம் பேஸ்புக்கில் பதிவு செய்தமையைத் தொடர்ந்து, இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது