பிறந்து ஐந்து நாட்களேயான கைக்குழந்தையுடன் கணவனின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்ட வீரமங்கை!!

விமான விபத்தில் உயிரிழந்த கணவரின் இறுதி ஊர்வலத்தில், பிறந்து 5 நாட்களே ஆன கைக்குழந்தையுடன் ராணுவ சீருடையில் கம்பீர நடை போட்டு வந்த பெண் அதிகாரியின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

விமானப்படை விங் கமாண்டரான டி.வாட்ஸ், கடந்த 15ம் தேதி அசாம் மாநிலத்தில் உள்ள சுமோய்மாரி கிராமம் அருகே நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார். இதனால் அவரது குடும்பத்தினர் நிலை குலைந்த நிலையில், நிறைமாத கர்ப்பிணியாக இருந்த கமாண்டர் டி.வாட்ஸ்-ன் மனைவியான ராணுவ மேஜர் குமுத் மோர்காவுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.

இந்நிலையில், தனது கணவனின் இறுதி ஊர்வலத்தில் 5 நாள் கைக்குழந்தையுடன் ராணுவ சீருடையில் குமுத் மோர்கா பங்கேற்றது காண்போரை கண்கலங்க செய்துள்ளது. இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like