தொழிலில் லாபம் பெருகுவதற்கு விநாயகருக்கு செய்ய வேண்டிய அபிஷேகங்கள்….!

முழு முதற் கடவுளான விநாயகரின் மனதை குளிர வைக்கவும் ஏராளமான அபிஷேகங்கள் உள்ளன. அரச மரத்தடியில் மேற்கு நோக்கி இருக்கும் விநாயகரை பூச நட்சத்திரன்று அன்னாபிஷேகம் செய்து வழிபட்டால் தொழிலில் லாபம் பெருகும்.

வேப்ப மரத்தடியில் கிழக்கு திசை நோக்கி இருக்கும் விநாயகரை உத்திராட்டதி நட்சத்திரத்தில் அபிஷேகம் செய்து பஞ்ச தீபம் ஏற்றி வழிபட்டால் மனதுக்கு விரும்பியபடி திருமணம் நடைபெறும். புன்னை மரத்தடி விநாயகரை ஆயில்ய நட்சத்திரத்தன்று இளநீர் அபிஷேகம் செய்து வழிபட்டால் தம்பதியர் ஒற்றுமை ஓங்கும்.

மகிழ மரத்தடி விநாயகருக்கு அனுஷம் நட்சத்திரத்தன்று மாதுளம் பழ அபிஷேகம் செய்தால் பில்லி சூனியம் தீய வினைகள் திருஷ்டி அகன்று விடும்.

ஆல மரத்தடியில் வடக்கு நோக்கி இருக்கும் விநாயகருக்கு மகம் நட்சத்திரத்தன்று அபிஷேகம் செய்து வழிபட்டால் நோய்கள் நீங்கும். மாமரத்தடி விநாயகருக்கு விபூதி அபிஷேகம் செய்து வழிபட்டால் எதிரிகள் தொல்லை நீங்கும்.

வன்னி மரத்தடியில் உள்ள விநாயகருக்கு அவிட்ட நட்சத்திரம் தினத்தன்று நெல் பொரி கொண்டு அபிஷேகம் செய்து வழிபட்டால் தடைபடும் திருமணங்கள் கை கூடும். பிரிந்த தம்பதிகள் ஒன்று சேருவார்கள். பொதுவாக உத்திராடம் நட்சத்திரக்காரர்கள் விநாயகருக்கு பால் அபிஷேகம் செய்து வழிபடுவது மிக, மிக நல்லது.

பரணி ரோகிணி புனர்பூசம் அஸ்தம் மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சந்தன அபிஷேகம் ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தேன் அபிஷேகம் செய்வது நல்லது. மகம் உத்திரம் விசாகம் கேட்டை பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் விநாயகருக்கு விபூதி அபிஷேகம் செய்தால் நல்லது நடக்கும். அபிஷேகத்தினால் இறைவன் குளிர்ந்து ஆசிர்வதிப்பான் என்பது புராணங்களின் கருத்தாகும்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like