யாழ்.இந்­துக் கல்­லூ­ரி­யின் சார­ணிய நூற்­றாண்டு விழா!

யாழ்ப்­பா­ணம் இந்­துக் கல்­லூ­ரி­யின் சார­ணிய நூற்­றாண்டு விழா நேற்று நடை­பெற்­றது.

கல்­லூரி மண்­ட­பத்­தில் நடை­பெற்ற நிகழ்­வுக்கு துருப்பு தலை­வர் பா.கஜேந்­தி­ரன் தலைமை தாங்­கி­னார். முதன்மை விருந்­தி­னர் கௌர­விப்பு, சார­ணர் சத்தி யப்­பி­ர­மா­ணம், வர­வேற்பு நட­னம், தலை­மை­யு­ரை­யைத் தொடர்ந்து நூற்­றாண்டு கீதம் வெளி­யீடு, நூல் வெளி­யீடு என்­பன இடம்­பெற்­றன.

இவற்­றைத் தொடர்ந்து நட­னம், நாட­கம், சான்­றி­தழ் வழங்­கல், பட்­டி­மன்­றம், வில்­லுப்­பாட்டு போன்ற கலை நிகழ்­வு­க­ளும் உயி­ரி­ழந்த சார­ணர்­க­ளின் பெற்­றோர்­க­ளுக்கு மதிப்­ப­ளிக்­கும் நிகழ்­வும் இடம்­பெற்­றது.

நிகழ்­வில் மாவட்ட ஆணை­யா­ளர் செ.தேவ­ரஞ்­சன், உதவி மாவட்ட திட்ட பணிப்­பா­ளர் ந.கௌரி­தா­சன், மருத்­து­வர் சி.யமு­னா ­னந்தா, கென் ரவர் குழும தலை­வர், இலங்கை வங்­கி­யின் இள­நிலை நிறை­வேற்று அதி­காரி ந.ஐங்­க­ர­நே­சன், பெற்­றோர்­கள், அயல் பாட­சாலை மாண­வர்­கள் எனப் பல­ரும் கலந்து கொண்­ட­னர்.

Get real time updates directly on you device, subscribe now.