வட்சப் குரூப்பிற்கு எதிராக நடவடிக்கை எடுக்க சி.பி.ஜ கடிதம்

வட்சப் குரூப் ஒன்றின் இலங்கை உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு இந்தியாவின் மத்திய புலனாய்வுப் பணியகம் (சி.பி.ஐ) இலங்கை அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளது.

இந்தியா, இலங்கை, அமெரிக்கா, நியூசிலாந்து உள்ளிட்ட பல நாடுகளில் இருந்து செயற்படும் வட்சப் குரூப் ஒன்றில் சிறுவர்கள் தொடர்பான வக்கிரக் காட்சிகள் பரிமாறப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது.

சிறுவர்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் வன்புணர்வுக் காட்சிகள் மற்றும் வக்கிர செயற்பாட்டுக் காட்சிகள் காணொளிகளாக குறித்த வட்சப் குழுமத்தில் தரவேற்றப்பட்டுள்ளன.

119 உறுப்பினர்களைக் கொண்ட இந்தக் குழுவில் இலங்கையரும் அட்மின்களாக செயற்பட்டுள்ளனர். இந்நிலையில் இக்குழுவின் இந்திய அட்மின் ஒருவரை மத்திய புலனாய்வுப் பணியக அதிகாரிகள் மடக்கிப் பிடித்துள்ளனர்.

இதனையடுத்து இலங்கையில் இருந்து செயற்படும் குறித்த குழுவின் அட்மினுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு இலங்கை அரசாங்கத்துக்கும் இந்திய சி.பி.ஐ அதிகாரிகள் கடிதம் அனுப்பியுள்ளனர்.

இது தொடர்பாக பொலிஸ் திணைக்களம் உரிய விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.