யாழில் மதவாதக் கருத்துக்களை தூண்டும் ஈழத்து சிவசேனா!!யாழ் நகரில் சுவரொட்டிகளால் பரபரப்பு!!

உள்ளுராட்சி சபைகளில் சைவ சமயத்தவர்களை தவிசாளர் மற்றும் உப தவிசாளர்களாக நியமிக்கவேண்டும் எனவும், யாழ்.மாநகரசபையின் மேயராக இமானுவேல் ஆனோல்ட் நியமிக்கப்படகூடாது. எனவும் மறைமுகமாக கூறும் வகையிலான சுவரொட்டிகளை ஈழத்து சிவசேனை அமைப்பு யாழ்.நகரில் பல இடங்களில் ஒட்டியுள்ளது.

உள்ளுராட்சி சபை தேர்தலுக்கு முன்னரும் சமய வாதம் பரப்பபட்ட நிலையில் தேர்தலின் பின்னரும் சமய வாதம் பரப்பட்டு வருகின்றது. இதன் ஒரு பாகமாகவே யாழ்.நகரில் சிவ சேனை அமைப்பினால் சுரொட்டிகள் ஒட்டப்பட்டிருக்கின்றது. குறித்த சுவரொட்டியில் எழுத ப்பட்டிருப்பதாவது, “தவத்திரு ஆறுமுக நாவலர் பிரிட்டோவை நிராகரித்தார் இராமநாதனை ஆதரித்தார்.

சைவ சமயிகளே சிந்தித்து செயலாற்றுங்கள்…. உங்கள் எதிர்காலம் உங்கள் கைகளில் என ஒரு சுவரொட்டியிலும், வடமாகாணம் எங்கும் மாடுகள் களவு, மாட்டிறைச்சிக்காக பசுக் கொலைகள், சைவ சமயம் பசு கொலையை ஏற்பதில்லை. 10 ஆயிரம் ஆண்டுகால மரவு நெறியும் இதுவே.

பௌத்த சமயமும் பசு கொலையை ஏற்பதில்லை. மாட்டிறைச்சி கடைக்கு உரிமம் வழங் காத உள்ளுராட்சி சபைகளை அமைப்போம். மண்ணின் மரபைக் காப்போம். என இரண்டாவது சுவரொட்டியிலும் எழுதப்பட்டிருக்கின்றது.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like