தினமும் 24 கிலோ மீற்றர் பாடசாலைக்கு நடந்து சென்ற மாணவர்களுக்கு ஜனாதிபதியின் விசேட பணிப்பில் அரச பேரூந்து சேவை!!

முல்லைத்திவு அம்பாள்புரம் பகுதியிலிருந்து ஜனாதிதியின் பணிப்புரைக்கு அமைவாக பாடசாலை மாணவர்களை ஏற்றிச்சென்ற பேருந்தின் மீது, தனியார் போக்குவரத்து சேவையினர் தாக்கப்பட்டமை தொடர்பில் மாங்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்பப்பட்டுள்ளது.

கடந்த வாரம் 24 கிலோமீற்றர் தூரம் கால்நடையாகப்பாடசாலை சென்று மாணவர்கள் கல்வி கற்று வருகின்றமை தொடர்பில் ஊடகங்களில் வெளியான செய்தியையடுத்து இலங்கை ஜனாதிபதி அவர்களால் அந்த மாணவர்களுக்கு போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் நேற்றைய தினம் (21-02-2018) தினம் காலை 6.10 மணிக்கு பயணிக்கின்ற பேருந்து நேரம் மாற்றம் செய்யப்பட்டு 6.40 மணிக்கு மல்லாவி ஊடாக அம்பாள்புரம் பகுதிக்குச்சென்று பாடசாலை மாணவர்களை ஏற்றி வன்னிவிளாங்குளம் பாடசாலை மற்றும் மாங்குளம் பாடசாலைகளுக்கு இறக்கி விட்டு மாங்குளம் ஊடாக முல்லைத்தீவு நோக்கி புறப்பட்ட, குறித்த இலங்கைப்போக்குவரத்துச்சபையின் பேருந்தின் மீது முல்லைத்தீவு தனியார் சேவையினர் தாக்க முற்பட்டதுடன், அவதூறாகப்பேசியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் மாங்குளம் பொலிஸ் நிலையத்தில்முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.