விசமாகிப்போன உணவு! அறுவர் மருத்துவனையில் அனுமதி – மட்டக்களப்பில் சம்பவம்!

மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேசத்தில் உணவு ஒவ்வாமை காரணத்தினால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காத்தான்குடி 3 ம் பிரிவில் வசிக்கும் குடும்பம் ஒன்று, நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு உண்ட உணவு விசமாகியதன் காரணமாக அதனை உட்கொண்டவர்கள் மயக்கமுற்ற நிலையில் மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்களில் இரு சிறுவர்களும் உள்ளடங்குவதோடு, வயோதிபப் பெண் ஒருவரும் அடங்குகின்றார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் வயோதிபப் பெண்ணின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலைத் தரப்பு தெரிவித்துள்ளது.

இதேவேளை சம்பவம் தொடர்பாக காத்தான்குடி பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like