கயிற்றில் தொங்கிய எலும்புக்கூடு!- விசாரணைகள் தீவிரம்!

அக்கரப்பத்தனை – போபத்தலாவ காட்டுப்பகுதியில் வயோதிப ஆண் ஒருவரின் சடலம் உருக்குலைந்த நிலையில் எலும்புக்கூடாக கண்டெடுக்கப்பட்டுள்ளது.

நேற்று (செவ்வாய்க்கிழமை) கண்டெடுக்கப்பட்ட குறித்த எலும்புக்கூடு போபத்தலாவ பகுதியைச் சேர்ந்த ஆர்.எம்.ரம்பன்டா (வயது 80) என்பவருடையது என அடையாளம் காணப்பட்டுள்ளது.

இரு பிள்ளைகளின் தந்தையான ரம்பன்டா கடந்த வருடம் யூலை மாதம் வீட்டை விட்டு சென்று வீடு திரும்பவில்லை என உறவினர்களினால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இதுவரையில் காணாமல் தொடர்பாக எதுவித தகவல்களும் கிடைக்காத நிலையில், நேற்று விறகு சேகரிக்க காட்டுப்பகுதிக்கு சென்ற ஒருவர் கயிற்றில் தொங்கிய நிலையில் எலும்புக்கூடு ஒன்று இருப்பதனைக் கண்டு பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.

குறித்த எலும்புக்கூட்டினை கண்டெடுத்த பொலிஸார் அது கொலையா அல்லது தற்கொலையா என்பது தொடர்பாக தீவிர விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Get real time updates directly on you device, subscribe now.